பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில் | தினகரன்

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

மிகுந்த எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்துள்ள Big Bad Wolf Books விற்பனை நிகழ்வானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், அனைத்து ஆங்கில புத்தகங்களும் அவற்றின் பரிந்துரை செய்யப்பட்ட சில்லறை விலைகளை விடவும் 50% முதல் 90% வரையான தள்ளுபடிகளுடன் கிடைக்கப்பெறுவதுடன், Big Bad Wolf Books விற்பனை நிகழ்வு உலகின் மிகப் பாரிய புத்தக விற்பனை நிகழ்வாக பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

இந்நிகழ்வானது 2019 ஒக்டோபர் 18 முதல் 28 வரை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (Sri Lanka Exhibition and Convention Centre - SLECC) இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விற்பனை நிகழ்வானது வார நாட்களில் முப 10 முதல் பிப 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் இடைவிடாது 24 மணி நேரமும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை முப 10 மணிக்கு ஆரம்பித்து ஞாயிறுக்கிழமை பிப 10 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு கிடைக்கப்பெறவுள்ளது. விற்பனை நிகழ்விற்கான உட்பிரவேசம் முற்றிலும் இலவசமாகும்!

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

Big Bad Wolf Books ஸ்தாபகரான ஜாக்குலின் நேக், இலங்கை பங்காளரான தீபக் மாதவன் மற்றும் ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளரும், Big Bad Wolf Books இலங்கை பங்காளருமான நிஷான் வாசலதந்திரி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த விற்பனை நிகழ்வுக்கு இலங்கை கல்வியமைச்சின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், உத்தியோகபூர்வ வங்கிச்சேவைப் பங்காளராக சம்பத் வங்கியும், உத்தியோகபூர்வ மொபைல் தொலைதொடர்பாடல்கள் பங்காளராக மொபிடெல் வலையமைப்பும், போக்குவரத்து பங்காளராக Big Bad Wolf Books நிறுவனமும் இந்த விற்பனை நிகழ்வின் பங்காளர்களில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

'2016 ஆம் ஆண்டு முதல் உலகைச் சுற்றி வலம் வருவதற்கு நாம் ஆரம்பித்துள்ளதுடன், வாசகர்களுக்கு கட்டுபடியாகும் விலைகளில் தரமான நூல்களை வழங்கி, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே எமது பிரதான இலக்காகும். அறிவு மூலமாக மக்களை ஊக்குவித்து, வலுவூட்டும் சக்தியை புத்தகங்கள் கொண்டுள்ளதுடன், Big Bad Wolf Books விற்பனை நிகழ்வின் மூலமாக அதற்கான களத்தை நாம் வழங்குகின்றோம்.

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

கடந்த தசாப்த காலத்தில் எத்தனையோ இளம் வாசகர்கள் Big Bad Wolf Books விற்பனை நிகழ்வில் தமது முதலாவது ஆங்கில புத்தகத்தை வாங்கிய சந்தர்ப்பங்களை நாம் கண்கூடாகக் கண்டுள்ளதுடன், அவர்கள் தற்போது மிகவும் சரளமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இளைஞர்,யுவதிகளாக வளர்ச்சி கண்டுள்ளனர். வாசிப்பதை ஊக்குவிக்கும் ஒரு ஸ்தாபனம் என்ற வகையில் உலகெங்கிலும் பெருந்தொகையான விசுவாசிகளை Big Bad Wolf Books விற்பனை நிகழ்வு சம்பாதித்துள்ளதுடன், பரந்த வகையான புத்தகங்கள் மற்றும் புத்தம்புதிய தலைப்புக்களில் மூன்றாவது முறையாகவும் கொழும்பில் Big Bad Wolf Books விற்பனை நிகழ்வை ஏற்பாடு செய்வதையிட்டு மிகுந்த பூரிப்படைகின்றோம்.' என்று ஊடகவியலாளர் மாநாட்டில் Big Bad Wolf Books விற்பனையின் ஸ்தாபகரான ஜாக்குலின் நேக் அவர்கள் கருத்து வெளியிட்டார்.

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

Big Bad Wolf Books இன் இலங்கை பங்காளரும், ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளருமான நிஷான் வாசலதந்திரி அவர்கள் இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், 'இதற்கு முன்னர் இடம்பெற்ற இரு புத்தக விற்பனை நிகழ்வுகளையும் இலங்கை வாசகர்களின் உற்சாகம் மற்றும் பேரார்வம் காரணமாக வியத்தகு நிகழ்வுகளாக நாம் மாற்றியமைத்திருந்தோம்.

பெருந்தொகை புத்தகங்களுடன் 3ஆவது முறையாகவும் The Big Bad Wolf கொழும்பில்-Big Bad Wolf 2019 to come to Sri Lanka

இந்த ஆண்டில் ProRead Lanka (Pvt) Ltd விற்பனை நிகழ்வில் அனைவருக்கும் புதிய மற்றும் வியப்பூட்டும் சலுகைகள் கிடைக்கவுள்ளமையால் இதற்கு வருகை தருமாறு அனைத்து வயதினருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்,' என்று குறிப்பிட்டார்.

Add new comment

Or log in with...