வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை | தினகரன்

வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 47 பேர் வருகை

- இலங்கையிலிருந்து 17 கப்பல் பணியாளர்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டுக் கப்பல் பணியாளர்கள் 47 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று (15) அதிகாலை, கட்டாரின் டோஹாவிலிருந்து  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒரு குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு, இண்டிகோ விமான சேவையான 6 E 9093 எனும் விசேட விமானத்தில் இந்தியாவின் பெங்களூரிலிருந்து மேலும் 05 கப்பல் பணியாளர்கள், மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இவ்விமானமானது இலங்கையில் தங்கியிருந்த கப்பல் பணியாளர்கள் 17 பேரை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் பெங்களூர் நோக்கி, மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.  


Add new comment

Or log in with...