ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்தவும்

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்தவும்-Temporarily Stop Jumma and 5 Times Prayer-ACJU

சகல ஒன்றுகூடல்களையும் தவிர்க்குமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலகசுகாதார ஸ்தாபனமும்,  இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்று கூடும் சந்தாப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் இவ்வேண்டுகோளை விடுப்பதாக உலமா சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை இந்நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் அன்பாக வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகளை இடைநிறுத்தவும்-Temporarily Stop Jumma and 5 Times Prayer-ACJU


Add new comment

Or log in with...