Healthguard நிலையம் One Galle Face இல் | தினகரன்


Healthguard நிலையம் One Galle Face இல்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப் பொருட்கள் சில்லறை விற்பனை சங்கிலியைக்கொண்ட Healthguardஐ சர்வதேச மற்றும் உள்ளூர் இலச்சினைகளுக்கான கொழும்பின் முதன்மை அங்காடி மையமான One Galle Face கட்டடத் தொகுதியில் அண்மையில் திறந்து வைத்தது. நிறுவனத்தின் மருந்து சங்கிலியின் 24ஆவது விற்பனை நிலையம் கட்டடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது. 

Healthguardஇன் One Galle Face விற்பனை நிலையமானது நிறுவனத்தின் ஒரு மூலோபாய வணிக மாதிரியின் விரிவாக்கமாக அமைந்துள்ளது. இதில் உலகத் தரம் வாய்ந்த தயாாிப்புக்கள் மற்றும் சேவைகள் மூலம் இலங்கையிலுள்ளவர்களுக்கு எப்போதும் வளர்ந்து வரும் ஆரோக்கியம், ஆரோக்கியம் மற்றும் அழகுப் பொருட்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்கிறது. புதிதாக நிறுவப்பட்ட முழு சேவை விற்பனை நிலைய திறப்பு நிகழ்விற்கு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.யின் குழு முகாமைப்பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, சன்ஷைன் ஹெல்த்கெயார்லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியாம் சதாசிவம், ஹெல்த்கார்ட் பார்மசி லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி இம்ஃபியாஸ் அலி மற்றும் பல விருந்தினர்களும் கலந்து கொண்டனர். 

இலங்கையின் முன்னணி மருந்தக சங்கிலியாக ஹெல்த்கார்ட் அமைவதோடு, மதிப்பை உருவாக்குதல், தேர்வை விரிவுபடுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குதல் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்துகிறது. One Galle Face – கொழும்பின் முதல் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்பட்ட கலப்பு பயன்பாட்டு மேம்பாட்டுத் திட்டமாகும். இதன்மூலம் அதில் குடியிருப்பவர்களுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும். 

புதிய ஹெல்த்கார்ட் விற்பனை நிலையம் இல. 27இல், நவீனத்துவங்களான புதிய வடிவமைப்பு, பார்வையொளிக் (Visual) காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புக்கள், சேவைகள் உற்பத்திப் பொருட்களையும் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய அனுபவத்தைப் பெறக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. காட்சி அனுபவத்தைத் தவிர எதிர்பார்க்கப்படும் அனலான மரியாதை மற்றும் தொழில்முறையிலான சேவையையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொளவார்களென எதிர்பார்க்கலாம். இதன் விளைவாக விரிவான சேவைப் பயிற்சியினையும் பெற முடியும்.


Add new comment

Or log in with...