Friday, April 26, 2024
Home » அமானா வங்கியின் நுமைர் காசிம் வங்கிகளின் CIA அமர்வின் தலைவராக நியமனம்

அமானா வங்கியின் நுமைர் காசிம் வங்கிகளின் CIA அமர்வின் தலைவராக நியமனம்

by Rizwan Segu Mohideen
February 5, 2024 3:24 pm 0 comment

அமானா வங்கியின் பிரதம உள்ளக கணக்காய்வாளரான நுமைர் காசிம், வங்கிகளின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் அமர்வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. வங்கியியல் மற்றும் கணக்காய்வு பிரிவுகளில் நுமைர் கொண்டுள்ள சிறந்த தலைமைத்துவம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை உறுதி செய்து, அமர்வின் அண்மைய கழக அறிமுக நிகழ்வின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளக கணக்காய்வில் உறுதியான பின்னணிப் பதிவைக் கொண்டுள்ள நுமைர், வங்கியின் பிரதம உள்ளக கணக்காய்வாளராக 2017 ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றார். அதற்கு முன்னதாக இவர் உள்ளக கணக்காய்வு பிரிவின் உதவி பதில் தலைவராகவும், சிரேஷ்ட முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமானா வங்கியுடன் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, அபு தாபி இஸ்லாமிய வங்கியில் உள்ளக செயன்முறை பகுப்பாய்வாளராக பணியாற்றியுள்ளதுடன், அபு தாபி தேசிய வங்கியில் செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவத்தை நுமைர் கொண்டுள்ளார். CIMA தகைமை பெற்ற முகாமைத்துவ கணக்காளரான நுமைர், Institute of Internal Auditors இன் இலங்கைப் பிரிவின் தலைவராக இயங்குவதுடன், CIMA ஸ்ரீ லங்காவின் உப குழுக்களிலும் அங்கம் வகித்துள்ளார்.

தமது நியமனம் தொடர்பில் நுமைர் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “வங்கிகளின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் அமர்வின் தலைவராக பணியாற்றுவதற்கு எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். கைகோர்ப்பு மற்றும் உள்ளக கணக்காய்வு நியமங்களை மேம்படுத்துவதற்கான எமது வங்கியியல் சமூகத்துக்கான திரண்ட அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாக இந்த நியமனம் அமைந்துள்ளது. துறையில் காணப்படும் சவால்களை தீர்ப்பது தொடர்பில் இந்த நிறைவேற்றுக் குழுவுடன் இணைந்து செயலாற்ற நான் எதிர்பார்ப்பதுடன், அறிவுப் பகிர்வை மேம்படுத்தவும், உள்ளக கணக்காய்வு சிறந்த செயன்முறைகளை வங்கித் துறையில் பரவலாக பின்பற்ற ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

CIA அமர்வின் 6 நிறைவேற்றுக் குழுவில் தலைவராக நுமைர் காசிம் நியமிக்கப்பட்டிருந்ததுடன், உப தலைவராக வருண கொக்கலகே (செலான் வங்கி), செயலாளராக துலான் அபேரட்ன (HSBC) மற்றும் பொருளாளராக ஜயான் பெர்னான்டோ (DFCC) ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். நிறைவேற்றுக் குழுவின் இதர அங்கத்தவர்களில் சரித்த ஜயவிக்ரம (சம்பத் வங்கி), பதவியை பூர்த்தி செய்து செல்லும் தலைவர் ருவனி டி சில்வா (NDB), கயான் ரணவீர (NTB), ஜெரமி டி சில்வா (PABC), தனஞ்ஜய தயானந்த (SDB) மற்றும் குசல கருணாரட்ன (காகில்ஸ் வங்கி) ஆகியோர் அடங்கியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் மீள நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிகளின் பிரதம உள்ளக கணக்காய்வாளர்களின் அமர்வு, அங்கிகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் அங்கிகாரம் பெற்ற விசேடத்துவ வங்கிகளின் உள்ளக கணக்காய்வு செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் ஒன்றிபை்பு அமைப்பாக திகழ்கின்றது. உறுதியான உறவுகள் மற்றும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை ஊக்குவித்தல், தொழிற்துறையில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காணல் மற்றும் உள்ளக கணக்காய்வு நிபுணர்கள் மத்தியில் அறிவு பகிர்வை ஊக்குவித்தல் போன்றவற்றை பிரதான நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. உள்ளக கணக்காய்வு நியமங்களை மேம்படுத்துவதில் இந்த அமர்வு முக்கிய பங்காற்றுவதுடன், வங்கியியல் தொழிற்துறையில் சிறந்த செயன்முறைகளை பரவலடையச் செய்வதிலும் பங்காற்றுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT