விஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் "சங்கத் தமிழன்" | தினகரன்

விஜய் சேதுபதி - ராஷி கண்ணா நடிப்பில் "சங்கத் தமிழன்"

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் தற்போது தனது மூன்றாவது "சங்கத் தமிழன்" படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாகக் கொண்டு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மற்றொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரி, மொட்டை ராஜேந்திரன், நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வீரம், ஜில்லா ஆகிய படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


Add new comment

Or log in with...