நோர்வூட்டில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு | தினகரன்

நோர்வூட்டில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

நோர்வூட்டில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-Missing Person Found as Dead Body-Norwood

 

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமு ஓயாவுக்கு நீர்வழங்கும் கிளை ஆறான சில்வாதெரி எனப்படும் ஆற்றிலிருந்து இன்று (27) 11.00 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் வெஞ்சர் கீழ்ப்பிரிவு, லோரன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான, சின்னப்பன் நிரஞ்சன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் (25) காணாமல் போயிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் அவரது சடலத்தினை கண்டு அறிவித்ததையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இந்த இடத்தில் வீசி எறியப்பட்டாரா அல்லது வேறு எதும் காரணங்களால் இறந்துள்ளாரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் நோர்வூட் பொலிஸார் , ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சடலம் ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் கீழ் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(ஹட்டன் விசேட நிருபர் - கே.சுந்தரலிங்கம்)

 

 

Add new comment

Or log in with...