Home » Amazon College கல்வி நிறுவனம் Amazon Campus ஆக தரம் உயர்வு
கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் ஆலோசனையில்

Amazon College கல்வி நிறுவனம் Amazon Campus ஆக தரம் உயர்வு

by mahesh
January 3, 2024 6:30 am 0 comment

கொழும்பு 4 இல் அமைந்துள்ள Amazon College உயர்கல்வி நிறுவனம் கடந்த 18 டிசம்பர் 2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வருடாந்த பட்டமளிப்பு விழாவில் Amazon Campus ஆக கல்வி ராஜாங்க அமைச்சரினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. Amazon College ஆனது 3ஆம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் பதியப்பட்ட ஒரு நிறுவனமாக காணப்படுகின்றது. அதன் பதிவிலக்கமானது P01/0854 ஆகும்.

இந்நிகழ்வில் 120 Diploma மாணவர்கள், 50 HND மாணவர்கள், 150 பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதுமாணி மாணவர்கள் விருதுகளை பெற்றனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், பிரதி மாலைதீவுகள் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் இருந்தும் சுமார் ஐந்து பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைப்பதற்காக வருகை தந்தனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சானக உதயக்குமார அமரசிங்க இதன்போது விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.

கல்லூரியின் 35 விரிவுரையாளர்கள், 20 ஊழியர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். சிறந்த விரிவுரையாளர்களுக்கான விருதுகளும் சிறந்த இணை நிறுவனத்திற்கான விருதுகளும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணை University ஆக இருக்கின்ற அனைத்து Universityயும் UCG யும் அங்கீகரிக்கப்பட்ட University, சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட University ஆக காணப்படுகின்றது.

ஆகவே எங்களிடம் கற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் பெறுகின்ற மாணவர்கள் எந்த நாட்டுக்கும் உயர்கல்விக்காகவோ தொழிலுக்காகவோ விண்ணப்பிக்கின்ற வாய்ப்புகளும் காணப்படுகின்றன. சுமார் 250 மாணவர்கள் இது வரையில் UK , Australia, Canada மற்றும் Europe ஆகிய நாடுகளுக்கு சென்று உயர் கல்வியினை பயின்று வருகின்றார்கள். உயர் கல்வியினையும் தொழில் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய Facebook பக்கத்தினை நீங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் இவற்றை நீங்கள் பாத்துக்கொள்ள முடியும்.

அதேபோன்று, Diploma இல் இருந்து ஆரம்பித்து அந்த மாணவர்களை HND நிறைவு செய்த பின்னர் தொடர்ந்து 1 வருடத்திலே Degree யினை நிறைவு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு எமது Campus இல் காணப்படுகின்றது. ஆகவே Part Time மூலமாக பயிலலாம். வெளிநாட்டில் இருக்கின்றவர்கள் Part Time மூலமாக எமது கல்வியினை மேற்கோள்ளவும் முடியும்.

மாணவர்களுக்கு கல்வி வகுப்புகள் மட்டுமில்லாது Extra Curricular activities வாண்மை விருத்தியும் நடைபெற்று வருகின்றது. Phycological Team, Counseling , club Student Council போன்ற பல்வேறுபட்ட மேலதிக வாண்மை விருத்தி விடையங்களும் எங்களிடம் காணப்படுகின்றன.

எமது விசேட பாட நெறிகளாக எங்களிடம் விசேடமாக வடிவமைக்கப்பட்டு தரமான விரிவுரையாளர்களை உள்ளடக்கி விசேடமான பாடநெறிகளும் கொடுத்து வருகின்றோம். அதாவது phycology, Counseling, Teacher Training Program, Business Management and Marketing, English இந்த துறைகளில் குறுகிய கட்டணத்திலே எமது பாட நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

30 சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கொண்டு எமது இந்த Campus நடைபெற்று வருகின்றது. 5 faculty எங்களிடம் உள்ளது. இதனை எங்களுடைய Campus உடைய அனைத்து நடவடிக்கைகளையும் நன்றாக வடிவமைத்து அதனை சரியாக அவதானிக்கின்ற வேலையை எங்களுடைய பணிப்பாளர் Ilham Marrikar செய்து வருகின்றார். மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய Website (www.amazoncollege.lk ) நாடவும். இவை பற்றி விளக்கங்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் உரையாற்றுகையில்;

இலங்கையில் பல அரச பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் தனியார் துறையினரும் பல்வேறுபட்ட மட்டத்திலான பல சேவைகளை இந்த நாட்டிற்காக வழங்கி வருகின்றது.

கல்வித் துறையில் மட்டுமல்லாது ஏனைய பல்வேறு துறைகளிலும் இத் தனியார் நிறுவனத்தினர் பல்வேறுபட்ட பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் இப்படிப்பட்ட தனியார் வகுப்புக்களை நடத்தி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. காரணம் என்னவென்றால் 10 வீத மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் இவர்கள் வேறு சிறிய துறைக்கு செல்லாமல் இப்படிப்பட்ட கல்வி

நிறுவனங்களில் கற்று பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ நல்ல தொழில்களை பெறக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்லாது, இந்த நிகழ்ச்சியை வந்ததில் இருந்து அவதானித்து வருகின்றேன் மிகவும் தரமான முறையில திறம்பட இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நான் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பான முறையில் இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

அதேபோல், இங்கு என்னோடு பல பேராசிரியர்கள் வருகை தந்தது

உண்மையிலே பெருமைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. ஆகவே எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய

வழிகாட்டலில் இன்னும் இந்த துறையை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எமது நாட்டிற்கு வெளிநாட்டு மாணவர்களை வரவழைத்து தரமான ஒரு கல்வியை எங்களால் வழங்க முடியும். இன்று வெளிநாட்டு மாணவர்கள் Malaysia, Singapore, UK, Australia, Canada போன்ற நாடுகளுக்கு உயர் கல்விக்காக செல்கின்றனர். அதேபோல், எமது நாட்டில் நல்லதொரு வாய்ப்பு, சூழல் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக மிக குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு மாணவர்களை இங்கு வரவழைத்து அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க முடியும். ஏனென்றால் எமது நாடு ஏனைய நாடுகள் போன்றல்லாது அனைத்து வளங்களையும் உள்ளடக்கிய நல்லதொரு வானிலை மற்றும் இயற்கை எழில் நிறைந்த நாடாக காணப்படுகிறது.

ஆகவே, இந்த நிகழ்ச்சியை மிக கச்சிதமாக நல்ல முறையில் ஏற்பாடு செய்த என்னையும் இந்த நிகழ்ச்சிக்கு அதிதியாக வரவழைத்த பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அமேசன் கெம்பசின் இயக்குநர் இல்ஹாம் மரைக்கார் உரையாற்றும் போது;

எமது எதிர்கால மாணவர்களின் பல்கலைக்கழக கனவை நனவாக்க அமேசன் கல்வி நிலையமும் வளர்ந்து வந்து தடம் பதித்துள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை நவீன கல்வி வளர்ச்சியின் ஊடாக 2024 ஆம் ஆண்டில் புதுப்பொலிவுடன் எமது நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் பெற்றுக் கொள்வார்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது கல்வி நிலையம் கல்வி வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்து வருவதை நாம் அறிவோம். இச்சாதனைகளுக்கு காவலாக அமைந்தவர்களுள் ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தக் கல்வி நிலையத்தில் கல்வி கற்ற மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் நிறுவனங்களில் கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எமது நாட்டுக்கு ஒளி விளக்குகள்.

இத்தகைய மாணவர் சமூகத்தை உருவாக்கிய கல்வி நிறுவனம் மேலும் ஒரு படி உயர்ந்து பல்கலைக்கழக தரத்தில் மாணவர்களைப் பயிற்றுவித்து பட்டங்களை வழங்க முன்வந்திருப்பது இக்கல்வி நிறுவனத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கும் மற்றும் எதிர்காலத்தில் இணைந்து கல்வி பயிலவுள்ள மாணவர்களுக்கும் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்கு உரித்தான நோக்கங்களை மகிழ்ச்சிகரமாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றி வைக்கின்ற நம்பிக்கையுடன் இக்கல்வி நிறுவனம் பயணம் செய்கின்றது.

ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சியானது அம்மாணவன் கல்வி பயிலும் நிறுவனம் காட்டுகின்ற சிறந்த வழிகாட்டல்களிலேயே தங்கியுள்ளது. அவ்வாறான மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற பொறுப்பு கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் குழாத்திற்குரியது. அந்த வகையில் எமது கல்வி நிறுவனத்தினர்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப நவீன கல்வி கற்கை நெறிகளை இங்கு திறன்பட செய்து வருகின்றார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.

அதன் காரணமாகத்தான் பெரு எண்ணிக்கையிலான மாணவர்கள் இங்கு வருகை தந்து கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இம்மாணவர்கள் வேறு எங்கும் செல்லாமல் தொடர்ச்சியாக இக்கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலுவதற்கு பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்களையும் இங்கு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர் சமூகம் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பினையும் இலகுவாகப் பெற்றுக் கொள்வார்கள்.

கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் மூலம் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பயன் அடைவதற்கும், திறன்மிக்க ஆசிரியர்கள் குழாத்தைக் கொண்ட கல்வி நிலையத்தில் புதிதாக பல்கலைக்கழகமாக பட்டப்படிப்பையும் மேற்கொள்ள எமது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT