இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை | தினகரன்

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக குற்றம்சாட்டி மற்றொரு பலஸ்தீனர் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்குக் கரையின் தென்பகுதி நகரான ஹெப்ரோனுக்கு அருகில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்ற பகுதி தெரியும் தூரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் கத்தியை ஏந்தியபடி இஸ்ரேல் சோதனைச் சாவடியை அணுகியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதன்போதே இஸ்ரேலிய படை அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 27 வயது வயில் அல் ஜபரி என்பவரே கொல்லப்பட்டிருப்பதோடு இந்த சம்பவத்தில் இஸ்ரேல் இராணுவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

கத்திக்குத்து தாக்குதலுக்கு முயல்வதாக குற்றம்சாட்டி இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனர்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.


Add new comment

Or log in with...