கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார் | தினகரன்


கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்

கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்-M Karunanidhi 94 Passed Away

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தனது 94 ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில தினங்களாக மிக கவலைக்கிடமான நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர். இன்று (07) மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்-M Karunanidhi 94 Passed Away

கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்-M Karunanidhi 94 Passed Away

தற்போது, கருணாநிதியின் உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு முன்னால் திரண்டு வருவதாகவும் அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்-M Karunanidhi 94 Passed Away

கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீர் சுகவீனமுற்ற கலைஞர் கருணாநிதி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இரு நாட்களின் பின்னர் (29) அவரின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக, மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

கலைஞர் மு. கருணாநிதி 94ஆவது வயதில் காலமானார்-M Karunanidhi 94 Passed Away

இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது.

இதனையடுத்து, இன்று (07) மாலை 6.10 மணியளவில் அவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலைஞர் மு.கருணாநிதி
பிறந்த திகதி: 03 ஜூன் 1924
வயது: 94
குழந்தைகள்: 

 • மு.க. முத்து
 • மு.க. அழகிரி
 • மு.க. ஸ்டாலின்
 • மு.க. தமிழரசு
 • மு.க. செல்வி
 • மு.க. கனிமொழி

மனைவிகள்

 • பத்மாவதி அம்மாள் (மரணம்)
 • தயாளு அம்மாள்
 • ராஜாத்தி அம்மாள்

திராவிட முன்னேற்ற கழக தலைவர்
1969-2011: 5 முறை தமிழ் நாடு முதல்வர்

 • 13 மே 2006 - 15 மே 2011
 • 13 மே 1996 - 13 மே 2001
 • 27 ஜன 1989 - 30 ஜன 1991
 • 15 மார்ச் 1971 - 31 ஜன 1976
 • 10 பெப் 1969 - 04 ஜன 1971

தமிழ் நாட்டின் பிரதான கட்சியான தி.மு.க. வின் தலைவராகலைஞர் கருணாநிதி, அரசியலுக்கு வரும் முன், தமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கினார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பில் 1947 இல் வெளிவந்த, 'ராஜகுமாரி' எனும் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கருணாநிதி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என சுமார் 40 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 2011 இல் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த பொன்னர் சங்கர் எனும் திரைப்படமே கருணாநிதி எழுதிய இறுதித் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னர் ஷங்கர் (2011)

நியாய தராசு (1989)

காஞ்சி தலைவன் (1963)

திரும்பி பார் (1953)

இளைஞன் (2011)

பாச பறவைகள் (1988)

இருவர் உள்ளம் (1963)

பணம் (1952)

பெண் சிங்கம் (2010)

பாடாத தேனீக்கள் (1988)

தாயில்லா பிள்ளை (1961)

மனோகரா (1952)

உளியின் ஓசை (2008)

நீதிக்கான தண்டனை (1987)

அரிசிளங்குமாரி (1961)

மணமகள் (1952)

பாச கிளிகள் (2006)

பாலைவன ரோஜாக்கள் (1985)

குருவஞ்சி (1960)

பராசக்தி (1952)

கண்ணம்மா (2005)

காலம் பதில் சொல்லும் (1980)

புதுமை பித்தன் (1957)

மந்திரி குமாரி (1950)

மண்ணின் மைந்தன் (2005)

பிள்ளையோ பிள்ளை (1972)

புதையல் (1957)

மருதநாட்டு இளராசி (1950)

புதிய பராசக்தி (1996)

அவன் பித்தனா? (1966)

ராஜா ராணி (1956)

அபிமன்யு (1948)

மதுரை மீனாட்சி (1993)

பூமாலை (1965)

ரங்கூன் ராதா (1956)

ராஜகுமாரி (1947)

காவலுக்கு கெட்டிக்காரன் (1990)

பூம்புகார் (1964)

மலைக்கள்ளன் (1954)

திரும்பி பார் (1953)

1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் கருணாநிதியின் திரைக்கதையில் உருவான மிகப் பிரசித்தி பெற்ற திரைப்படமாகும்.

எழுத்தாளரான அவர், பல்வேறு கதைகள், நாவல்கள் என தமிழ் மொழி, இலக்கியத்திற்கு அரிய சேவைகளை ஈட்டியுள்ளதோடு, கலை மாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை மாமணி விருது

இதேவேளை தமிழக முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் பலம் பொருந்திய மற்றுமொரு கட்சியுமான அ.இ.அ.தி.மு.கவின் செயலாளருமான ஜெயலலிதா (68) கடந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி சென்னை அப்பலோ மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் கையொப்பம்


Add new comment

Or log in with...