Friday, April 26, 2024
Home » இலங்கையின் முதலாவது இலத்திரனியல் தொழிற்சாலையை ஆரம்பித்த OREL Corporation

இலங்கையின் முதலாவது இலத்திரனியல் தொழிற்சாலையை ஆரம்பித்த OREL Corporation

by damith
November 21, 2023 10:56 am 0 comment

உலக அளவில் இன்று கொண்டாடப்படும் உலகத் தொலைக்காட்சி தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையின் முதலாவது தொழின்முறை கட்டமைப்பிலான எலக்ட்ரோனிக் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் கைத்தொழிற்சாலையை திறந்து வைத்து, எலக்ட்ரோனிக் துறையில் தங்களது முன்னோடிசாதனையை OREL Corporation பெருமையுடன் அறிவிக்கிறது. OREL Electronics வர்த்தக நாமத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய செயற்திட்டம், அதிநவீன இலத்திரனியல் உற்பத்திகளுக்கான வளர்ந்து வரும் மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்காக OREL Corporation நிறுவனத்தின் தனித்துவமான முயற்சியின் விளைவாகும்.

தொடர்ச்சியாக புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்து இலங்கையில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் என்ற பெருமையையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. அதி நவீன இயந்திரங்களால் பரிபூரண முழுத்திறமையும், சிறந்த தேர்ச்சியும் பெற்ற பணியாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது.

OREL Corporation இன் இலத்திரனியல் வர்த்தகப் பிரிவின் தலைவர் அனுராதா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், தகவல் சேகரிப்பதற்கும், பொழுது போக்கிற்கும் சக்திவாய்ந்த சாதனமாக தொலைக்காட்சிக்கு தனித்துவமான இடம் உண்டு, இது நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சிகரமான வாய்ப்பாகும். இதன் ஊடாக OREL Corporation மூலம் இலங்கையின் தொழிநுட்ப அபிவிருத்திக்கு பங்களிப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த உற்பத்தி செயன்முறை தொடர்பான கூட்டங்களுக்காக 100 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களின் பங்களிப்புடன், இந்த புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளரை சென்றடையும், இது வழக்கமான தர சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

OREL Electronics ஸ்மார்ட் தொலைக்காட்சி சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது சர்வதேச விற்பனை நாமங்களில் உங்கள் கரங்களுக்கு கிடைக்கும் பல்வேறு தொலைக்காட்சிகளின் வடிவமைப்பு மற்றும்அவற்றின் வடிவமைப்புகளை பின்பற்றி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Orel Smart TV டைலான மெல்லிய நிறைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது உள்ள தொலைக்காட்சிகளில் மெல்லிய தொலைக்காட்சியாக அறிமுகம் செய்ய முடியும். தெளிவான 16.7 மில்லியன் வண்ணங்களை கொண்ட ultra-high-definition (UHD) 4K displays அகலத்திரையின் மூலம் தெளிவான காட்சிகளால் உங்களை திகைக்க வைக்கிறது. மேலும், Orel Smart TV MdJ, HDMI, USB, WiFi, Ethernetபோன்ற பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளதால், Orel Smart TV எந்தவித சந்தேகமும் இல்லாமல் சந்தையை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சியாக உருவெடுக்கும் எனபது உறுதியாகும். சமீபத்திய Android 13.0 இயக்க முறைமையில் இயங்குவதால் Orel Smart TV ஸ்மார்ட் தேவைகளைப் பூர்த்தி செய்யும். குறைந்த மின்நுகர்வில் இயங்குவதால் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தால் மக்களின் பொழுதுபோக்கு அல்லது தகவல் அறிவை வளர்த்து கொள்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT