உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் தலைவராக மெத்திவ்ஸ் | தினகரன்

உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் தலைவராக மெத்திவ்ஸ்

 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (09) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இதனைத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரை இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை, ஒரு வீரரிடம் ஒப்படைப்பது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளரான, சந்திக ஹத்துருசிங்க மற்றும் தெரிவுக் குழுவினரின் நோக்கம் என இதன் போது தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், எதிர்வரும் 15 ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்குபற்றும் முக்கோண கிரிக்கட் தொடரில் அஞ்சலோ மெத்தியூஸ், இலங்கை அணித் தலைவராக செயற்படவுள்ளார்.

பங்களாதேஷ் முக்கோண கிரிக்கெட் தொடரை நோக்காகக் கொண்டு, பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவினால் இலங்கை அணிக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் பில் ஜோன்சன், இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...