Sunday, May 5, 2024
Home » இலங்கையின் முதலாவது Strawberry கிராமம் நுவரெலியாவில்

இலங்கையின் முதலாவது Strawberry கிராமம் நுவரெலியாவில்

- திட்டத்திற்கென 40 விவசாயிகள் தெரிவு

by Prashahini
April 25, 2024 2:53 pm 0 comment

– ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவீடு

இலங்கையின் முதலாவது Strawberry செய்கை முன்மாதிரி கிராமத்தை நுவரெலியாவில் அமைப்பதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை இலக்காக கொண்டு புதிய செய்கைகளுக்கு விவசாயிகளை பழக்கப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய திட்டத்திற்கென நுவரெலியா மாவட்டத்தில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான நிதிவளம், செய்கைக்கான Strawberry மரக்கன்றுகள் உட்பட செய்கை நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நீர்வளம் என்பவற்றை வழங்குவதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக இந்த செய்கைக்கென ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன் இதில் 750,000 ரூபாவை திணைக்களம் மீள அறவிடாது அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை Strawberry செய்கைகயை மேற்கொள்வதற்கான நிலப்பகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT