அர்ஜுன் மஹேந்திரன் இன்றும் ஆணைக்குழுவில் | தினகரன்

அர்ஜுன் மஹேந்திரன் இன்றும் ஆணைக்குழுவில்

 
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்றைய தினமும் (20) பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
 
முதன் முதலாக நேற்றைய தினம் (19) அவர் சாட்சிக் கூட்டில் நின்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார். 
 
மத்திய வங்கியினால் கடந்த 2015 பெப்ரவரி 27 மற்றும் மார்ச் 29, 31 தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய விலை மனு கோரல் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...