Friday, April 26, 2024
Home » Start-Up-Cycle அறிமுகப்படுத்தும் John Keells குழுமத்தின் Plasticcycle

Start-Up-Cycle அறிமுகப்படுத்தும் John Keells குழுமத்தின் Plasticcycle

by Rizwan Segu Mohideen
September 19, 2023 11:23 am 0 comment

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமான பிளாஸ்டிக்சைக்கிள், இந்த ஆண்டிற்கான அவர்களின் முக்கிய திட்டங்களில் ஒன்றான “ஸ்டார்ட்-அப்-சைக்கிள்”, ஜோன் கீல்ஸ் X உடன் இணைந்து தொடங்கப்பட்ட சவால் தளமாகும். இது இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பிளாஸ்டிக் பாவனை மற்றும் கழிவுகளை குறைப்பதில் உள்ள சவால்கள் தொடர்பாக இலங்கையின் வணிகங்கள் வழங்கும் பிரச்சினை பற்றிய அறிக்கைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதுமையான நடைமுறைப்படுத்தக்கூடிய நீண்ட கால தீர்வுகளைத் தேடும் முயற்சியான, ஸ்டார்ட்-அப்-சைக்கிள், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வளர்ப்பதையும் ஆதரவளிப்பதையும் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கும் அதே வேளையில், அடுத்த தலைமுறை மாற்றங்களை உருவாக்குபவர்களை வளர்ப்பது மற்றும் வலுவூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

அண்மைக் காலங்களில், இலங்கையின் சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் நுகர்வோர் உணவுத் துறைகள் பிளாஸ்டிக் தொடர்பான கவலைக்குரிய விடயங்களை எதிர்த்துப் போராடுவதில் கணிசமான தடைகளை எதிர்கொண்டுள்ளன. இந்த அவசரப் பிரச்சினைக்கு விடையளிக்கும் வகையில், ஸ்டார்ட்-அப்-சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் அது பெருமிதம் கொள்கிறது. இது நமது நாட்டிற்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டின் பிரச்சினையை நேரடியாகக் குறிவைக்கும் முன்னோடி தீர்வுகளைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும்.

குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் பிரத்தியேகமாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்கள் பிரச்சினை அறிக்கைகளை வழங்கும் அந்தந்த வணிகங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஊடாடும் அமர்வின் போது, விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு சவாலின் குறிப்பிட்ட விவரங்களையும் ஆராய்ந்து தெளிவு பெறலாம். மேலும் 6 வார நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்படும்.  இதில் சட்ட, நிதி, வணிக செயல்முறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் தீர்வு வழங்குநர்களுக்கு அவர்களின் குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பை (MVP) உருவாக்குவதற்கான பயணத்தில் வழிகாட்டி ஆதரவளிப்பார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT