Sunday, May 5, 2024
Home » ‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ வெளியீட்டு விழா 23ஆம் திகதி கொழும்பில்

‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ வெளியீட்டு விழா 23ஆம் திகதி கொழும்பில்

by sachintha
September 19, 2023 11:40 am 0 comment

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவை இணைந்து வெளியிடும் ‘அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள்’ வெளியீட்டுவிழா எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலுடன், செல்வி பிரியன்கா ஆன் பரான்சிஸ் தமிழ் வாழ்த்துபாடி ஆரம்பித்து வைப்பார்.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ஆகியவற்றின் இணைப்பாளர் த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா) வரவேற்புரையையும், தொடக்கவுரையும் நிகழ்த்துவார்.

வாழ்த்துரைகளை ஞானம் கலை இலக்கிய சஞ்சிகயின் பிரதம் ஆசிரியர் மருத்துவர் ஞானசேகரன் மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை. எஸ்.தில்லைநடராஜா ஆகியோர் வழங்குவார்கள்.

இந்நிகழ்வில் ஊடக அதிதிகளாக தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன், தமிழன் பிரதம ஆசிரியர் இரா. சிவராஜா, வீரகேசரி நிறுவன பிரதம செய்தி முகாமையாளர் ஆர். பிரபாகன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூல் விமரசனத்தை எழுத்தாளாரும், ‘தகவம்’ செயலாளருமான திருமதி வசந்தி தயாபரன் முன் வைப்பார்கள்.

முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ள, சிறப்பு பிரதிகளை தொழில் அதிபர்களான திருமதி சண்முகப்பிரியா கார்த்திக், ராஜ்பிரசாத் விஸ்வாநதன் (துரைவி), கௌசல்யா கோவிந்தப்பிள்ளை ஆகியோருடன் பலர் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர்.

ஏற்புரையை நூலாசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை நிகழ்த்த, நன்றியுரையை இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம் மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் ஊடக இணைப்பாளர் கலாபூஷணம் கே.பொன்னுத்துரை நிகழ்த்துவார். நிகழ்வுகளை மேமன் கவி தொகுத்து வழங்குவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT