லொத்தர் டிக்கட் விலை ரூ. 20 ஆக பேணப்படும் | தினகரன்

லொத்தர் டிக்கட் விலை ரூ. 20 ஆக பேணப்படும்

 
லொத்தர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கட்டுகளின் விலையை ரூபா 20 ஆக பேணுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா இதனை இன்று (17) உறுதிப்படுத்தினார்.
 
அண்மையில் லொத்தர் சீட்டிழுப்பு டிக்கட்டுகளின் விலையை ரூபா 20 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரித்திருந்தது.
 
இதனை அடுத்து, கடந்த சில நாட்களாக, குறித்த விலை அதிகரிப்புக்கு எதிராக லொத்தர் சீட்டிழுப்பு முகவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததோடு, விற்பனை நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விலை அதிகரிப்பு, மற்றும் விற்பனை இன்மை காரணமாக லொத்தர் சீட்டிழுப்பு விற்பனை வெகுவாக குறைவடைந்ததாக லொத்தர் சபை அறிவித்திருந்தது.
 
இந்நிலையிலேயே, குறித்த லொத்தர் சீட்டிழுப்பு டிக்கட்டுகளின் விலையை ரூபா 20 ஆக பேணுவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...