வீரையன் | தினகரன்

வீரையன்

 

இனிகோ பிரபாகரன், ஷைனி நடிக்கும் படம் ‘வீரையன்’. எழுதி தயாரித்து இயக்குகிறார் பரித். எஸ்.என்.அருணகிரி இசை. பி.வி.முருகேஷா ஒளிப்பதிவு. ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் ஓடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றனர். இயக்குனர் சற்குணம் பேசும்போது, ‘திறமை இருந்தாலும் தன்னடக்கம் முக்கியம்.

இப்பட இசை அமைப்பாளர் அருணகிரியிடம் அதை பார்க்கிறேன். பாடல்கள் யதார்த்தமாக உள்ளது. இயக்குனர் பரித் எனது முதல்படமான களவாணி படத்தின் தயாரிப்பாளர் நசீரின் உறவினராக அறிமுகமானார். அப்படம் முழுவதும் என்னுடன் பணியாற்றினார்.

முன்பே வீரையன் கதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதேபோல் எடுத்திருக்கிறார். சொந்தக்காசில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள்தான் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப் பெரிய கலைஞர்கள்’ என்றார்.

இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது, ‘இப்பட ஹீரோ இனிகோ பிரபாகரன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர். அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்ததால் அந்த வாய்ப்பு தவறிப்போனது.

நீர்பறவை. இடம்பொருள் ஏவல் படங்களிலும் வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அவரை நிச்சயம் ஹீரோவாக வைத்து படம் இயக்குவேன்’ என்றார். 


Add new comment

Or log in with...