ரவிராஜ் கொலை சந்தேகநபர்கள் விடுதலை | தினகரன்

ரவிராஜ் கொலை சந்தேகநபர்கள் விடுதலை

 
றிஸ்வான் சேகுமுகைதீன்
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு ஹுணுபிட்டியிலுள்ள பாதுகாப்பு பிரிவுடன் தொடர்புடைய இடம் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டது.
 
இதன் அடிப்படையில் சந்தேகநபர்களாக குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (23) நள்ளிரவு இடம்பெற்ற விசேட நீதிபதிகள் கொண்ட குழுவினால் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
 
இதில், சந்தேகநபர்களாக கடற்படையைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
விசேட நீதிபதிகள் கொண்ட குழுவினால் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட ஐவரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே குறித்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
 

Add new comment

Or log in with...