Monday, May 20, 2024
Home » புதிய கூட்டணி மூலம் இலங்கையின் தொழில்நுட்ப சூழலைப் புரட்சிகரமாக்கும் செயலியை வெளியிடும் Hatch மற்றும் Orion City

புதிய கூட்டணி மூலம் இலங்கையின் தொழில்நுட்ப சூழலைப் புரட்சிகரமாக்கும் செயலியை வெளியிடும் Hatch மற்றும் Orion City

by mahesh
May 8, 2024 6:00 am 0 comment

பெருமைக்குரிய தொழில் தொடக்க விரைவுபடுத்துனரும்/ அடைகாப்பாளருமான Hatch மற்றும் முன்னணி IT பூங்காவான Orion City ஆகியன இணைந்து, இலங்கையின் தொழில்நுட்ப சூழல்தொகுதியிலும் வணிக நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புத்தாக்கமான டிஜிட்டல் தளத்தை வெளியிட்டுள்ளன.

இந்த புத்தாக்கமான செயலியானது, கொழும்பு 01 Hatch Works, கொழும்பு 09 Orion City யில் உள்ள Orion Nest, கொழும்பு 03 புதிதாக வரவுள்ள Orion City Colombo ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இருந்து, அத்தியாவசிய சேவைகள் மற்றும் வசதிகளுக்கான அணுகலை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டிணைவின் மூலம், இலங்கையின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் தொகுதியில், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் போன்றவற்றிற்கு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சிறந்த வாய்ப்புகளையும், சிறந்த அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை, கொழும்பில் 1910 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப் பகுதிக்குரிய, புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் அமைந்துள்ள Hatch ஆனது, தொழில்முனைவோருக்கான மையமாக செயற்படுகிறது. அதன் வலையமைப்பில் 1,000 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 700 தொழில் தொடக்கங்கள் உள்ளன. கொழும்பு 09 இல் அமைந்துள்ள Orion City ஆனது, பல்வேறு சந்திப்புகள், ஓய்வு மற்றும் உணவகம் போன்ற வசதிகளை வழங்குகின்ற, 40 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற உயர் மட்ட பணியிடங்களைக் கொண்டுள்ள மையம் என புகழ் பெற்று விளங்குகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT