Wednesday, May 1, 2024
Home » இஸ்ரேல் – ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் இந்திய தூதரகம் தமது நாட்டவர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியது

இஸ்ரேல் – ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் இந்திய தூதரகம் தமது நாட்டவர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியது

by Rizwan Segu Mohideen
April 18, 2024 6:42 pm 0 comment

இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கு உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அமைதியாக இருக்கவும் இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் ஆலோசனை வழங்கியது.

அங்குள்ள இந்திய பிரஜைகளின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிராந்தியத்தில் இடம்பெறும் அண்மைய நிகழ்வுகளின் காரணமாக, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்று இஸ்ரேலில் உள்ள தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய தூதரகம் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது.

“தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளது” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்களுக்கான அவசர உதவி எண்ணொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“எந்தவொரு அவசர உதவிக்கும், தயவுசெய்து தூதரகத்தை 24 மணி நேரமும் தொலைபேசி: +972547520711, +972543278392, மின்னஞ்சல்: [email protected] ஊடாக தொடர்பு கொள்ளுமாறும்” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள தனது தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான், சனிக்கிழமை 200க்கும் மேற்பட்ட எறிகணைகளால் இஸ்ரேலை தாக்கியது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த வார தொடக்கத்தில், வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை இந்திய குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியது.மறு அறிவிப்பு வரும் வரை இரு நாடுகளுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டது.

தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் இருப்பவர்கள் இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அமைச்சு மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT