Home » இஸ்ரேல் இராணுவத்தின் உரிமை மீறல்கள் உறுதி

இஸ்ரேல் இராணுவத்தின் உரிமை மீறல்கள் உறுதி

by Gayan Abeykoon
May 1, 2024 9:48 am 0 comment

இஸ்ரேல் இராணுவத்தின் ஐந்து பிரிவுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிப்பட்ட சம்பவங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கண்டறிந்தபோதும் அமெரிக்காவின் இராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அனைத்து சம்பவங்களும் தற்போதைய போருக்கு முன்னர் காசாவுக்கு வெளியில் இடம்பெற்றவையாகும். இவை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெற்றவை என்று நம்பப்படுகிறது.

இதில் நான்கு பிரிவுகளில் இஸ்ரேல் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் ஐந்தாவது பிரிவு தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கி இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டது இதனால் இந்த அனைத்து இராணுவப் பிரிவுகளும் அமெரிக்க இராணுவ உதவியை பெற தகுதி பெற்றுள்ளன.

இஸ்ரேலுக்கு இராணுவ உதவி அளிக்கும் பிரதான நாடான அமெரிக்கா ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு முறைமைகளை வழங்குகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT