Home » நல்லதண்ணி பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நல்லதண்ணி பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Gayan Abeykoon
May 1, 2024 11:04 am 0 comment

நல்லதண்ணி பகுதியில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.   குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சுற்றுலாப் பயணிகள், சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் மற்றும் அப்பகுதி  மக்கள் எனபலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

அப்பகுதியிலிருந்த சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரையும் குரங்கு கடித்துள்ளதாக விடுதி உரிமையாளர் தெரிவித்தார்.  இந்நாட்களில் நல்லதண்ணி நகரில் அதிகளவில் குரங்கு கூட்டம் அலை மோதுவதை காணமுடிகிறது.

குரங்குகள் விடுதிகள், கடைகள், வீடுகளில் புகுந்து உணவை எடுத்துக்கொண்டு ஓடுவதாகவும் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  உடனடியாக குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விடுதி உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(மஸ்கெலியா தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT