Home » உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும்

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும்

- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதின வாழ்த்து

by Prashahini
May 1, 2024 12:43 pm 0 comment

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் – என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

”உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகள் மற்றும் வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (01) உலகத் தொழிலாளர்கள் நாளாக கொண்டாடுகிறோம்.

ஒரு நாட்டின் முதுகெலும்பு தொழிலாளர்கள் தான். பாட்டாளி வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடையும். இலங்கையில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் சுதந்திர இலங்கையிலும் கூட கடுமையான போராட்டங்கள் ஊடாகவே தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்ததுள்ளனர்.

குடியுரிமையற்று இருந்த பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இ.தொ.கா போராட்டங்களை வரலாறு முழுவதும் செய்துள்ளது.

மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளனர். அதே வழியில் இ.தொ.கா தொடர்ந்தும் பயணம் செய்யும். தொழிலாளர்களுக்காக எமது தொழிற்சங்க ரீதியான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தொழிலாளர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் பொருளாதார திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கபபடுவதை உறுதி செய்யும் அதேவேளை அவர்களின் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த இ.தொ.கா முன்னின்று செயற்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT