Thursday, May 16, 2024
Home » கொமர்ஷல் வங்கி நடத்திய வர்த்தக கண்காட்சி

கொமர்ஷல் வங்கி நடத்திய வர்த்தக கண்காட்சி

by mahesh
April 10, 2024 6:30 am 0 comment

நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SMEs) பிரிவினருக்கு கொமர்ஷல் வங்கி அண்மையில் மகத்தான பெறுமதிமிக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. SME பிரிவினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக கண்காட்சி மூலம் அவர்கள் கொழும்பில் தமது உற்பத்திகளை காட்சிப் படுத்தி வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான மகத்தானதோர் சந்தர்ப்பமாக இது அமைந்தது.

கொழும்பு-01ல் அமைந்துள்ள இலங்கை மாநாட்டு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இரண்டு நாள் நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், பதுளை, குருணாகல், கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த SME பிரிவினர் இங்கு தமது பொருள்களை காட்சிப்படுத்தி இருந்தனர். அத்தோடு இந்தப் பிரிவினருக்கும் நாட்டின் விவசாய துறையினருக்கும் சேவைகளை வழங்கும் எட்டு கூட்டாண்மை நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.

இவர்களுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப வசதிகளை பிரதிபலிக்கும் வகையில் ComBank LEAP GlobalLinker ஆல் விருத்தி செய்யப்பட்ட அலைவரிசை ஊடாக எட்டு SME நிறுவனங்களுக்கு தமது உற்பத்திகளை டிஜிட்டல் அலைவரிசை ஊடாக காட்சிப்படுத்தும் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT