Sunday, April 28, 2024
Home » அரச தரப்பு எம்பிக்களை நாடு திரும்புமாறு அழைப்பு

அரச தரப்பு எம்பிக்களை நாடு திரும்புமாறு அழைப்பு

by mahesh
March 20, 2024 8:54 am 0 comment

வெளிநாடு சென்றுள்ள அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அரசாங்கத் தரப்பின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காகவே இவர்களை அவசரமாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க,பிரதம கொரடா அலுவலகச் செயலாளர் ஜெகத் பெரேராவுக்கு இதற்கான அழைப்பை விடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி நேற்று (19) ஆரம்பமான சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாளை (21) வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, பந்துலகுணவர்தன, ஹரின்பெர்னாண்டோ, மனுஷநாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர்களான மதுரவிதானகே, அனுரபிரியதர்ஷனயாப்பா ஆகியோருக்கே அரசாங்கத் தரப்பு பிரதம கொரடா அலுவலகச் செயலாளர் ஜெகத் பெரேரா இந்த அறிவித்தலை நேற்று விடுத்திருந்தார்.

அரசியலமைப்புச் சபையின் பிரதானி என்ற வகையில், சபாநயகருக்கு எதிராக எதிரணியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்காகவே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT