Monday, April 29, 2024
Home » VAT வரியை 18% இலிருந்து 15% ஆக குறைக்க நடவடிக்கை

VAT வரியை 18% இலிருந்து 15% ஆக குறைக்க நடவடிக்கை

- ஜனாதிபதி தைரியமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்துகிறார்

by Rizwan Segu Mohideen
March 18, 2024 4:12 pm 0 comment

தற்போது 18% ஆக உள்ள பெறுமதி சேர் வரியை (VAT) அடுத்த மாதம் முதல் 15% சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஆறாவது ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மஹாதீர் முகமது போன்ற தலைவருடன் ஒப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பை ஏற்று குறுகிய காலத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்.  ரணில் விக்ரமசிங்க தைரியமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று இந்த நாட்டினை சிறப்பாக வழிநடத்தி தொலைநோக்கு தலைவர் என்பதை நிரூபித்துள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மனுஷ நாணயக்கார,

மக்கள் பதவியை விட்டு வெளியேற்றியபோது, ​​நாட்டைக் முன்னேற்ற முடியாது என்றபோதும், ​​எம்.பி. அமரகீர்த்தி கொல்லப்பட்டபோதும், வீடுகளுக்குத் தீ வைத்து சேதங்களை ஏற்படுத்திய போதும் ​​‘வேண்டாம்’ என்று சொன்ன ரணில் விக்ரமசிங்க மூலம் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிர்மாணித்து நீர்ப்பாசனத் தொழித்துறையை ஆரம்பித்தார். அவ்வாறே டி.எஸ். சேனநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தினால் நாடு வளம்பெற்று அரிசியில் தன்னிறைவு அடைந்தது.

ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பாட்டினால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது இதனால் மக்களின் வாழ்கை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலைமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் மஹதீர் முகமது எனத் தெரிவிக்கப்படும் ஒரு தலைவர் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் தவறான முடிவுகளை எடுத்ததால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

முன்பு போன்று கருத்துக்களால் நாம் ஏமாற்றப்படாமல் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒவ்வெருவரும் எம்மில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

அதன் அடிப்படியில் “ஜயகமு ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக SMART YOUTH CLUB ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக ஹோட்டல் முகைமாத்துவம், நீர்க்குழாய் பொருத்துதல். வர்ணம் பூசுதல் மற்றும் வெல்டிங் போன்ற அனைத்து தொழித்துறைகளுக்கும் பிரதேச மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளை www.glocal.lk என்ற இணையத்தளத்தில் மேற்கொள்ளமுடியும்.

இளைஞர்களை ஒன்றிணைவதன் மூலம் பொருளாதாரப் போராட்டத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT