Home » HUTCH – கல்வி அமைச்சுடன் கைகோர்த்து இலத்திரனியல் சைக்கிள்களை மாணவர்களுக்கு அன்பளிப்பு

HUTCH – கல்வி அமைச்சுடன் கைகோர்த்து இலத்திரனியல் சைக்கிள்களை மாணவர்களுக்கு அன்பளிப்பு

by sachintha
March 14, 2024 11:47 am 0 comment

சமூக மேம்பாடு மற்றும் நிலைபேணத்தகு வழியிலான போக்குவரத்து ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, முன்னணி தொலை தொடர்பாடல் சேவை வழங்குனரான ஹட்ச் ஸ்ரீ லங்கா நிறுவனம், வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிலைபேண்தகமை மீதான தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டும் வகையில் புதுமையான முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் கல்வித்துறையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் முயற்சிகளில் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளமைக்கு அமைவாக, இலங்கையில் கிராமப்புற பாடசாலைகள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்கு கல்வி அமைச்சின் கூட்டாண்மையுடன் இணைந்து மின்சாரத்தால் இயங்கும் 130 சைக்கிள்களை (e-bike) நன்கொடையாக வழங்கும் ஒரு மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

“நிலைபேணத்தகு போக்குவரத்தினூடாக கல்வியை மேம்படுத்தல்” என்ற பெயரிலான இந்த முயற்சி, தொலைதொடர்பாடல் சேவைகளை வழங்குவதற்கும் அப்பால், பரந்த அளவில் சமூக மேம்பாட்டை கணிசமாக வளர்ப்பதில் ஹட்ச் நிறுவனத்தின் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றது. இலங்கையில் கல்வியை மேம்படுத்தி, தரம் உயர்த்துதல் மற்றும் இது தொடர்பில் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு உதவுவதல் ஆகியவற்றில் ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த ஒரு விசேட வைபவத்தில் மின்சாரத்தில் இயங்கும் இந்த சைக்கிள்கள் உத்தியோகபூர்வமாக கையளித்து வைக்கப்பட்டன. இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தர்மசிறி குமாரதுங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திசாநாயக்க ஆகியோரும் மதிப்பிற்குரிய விருந்தினர்களில் இடம்பெற்றிருந்தனர். ஹட்ச் நிறுவனத்தின் சார்பில், இந்த நிகழ்வுக்காக நாட்டிற்கு விசேடமாக வருகை தந்த Hutchison Asia Telecommunications (HAT) இன் பணிப்பாளர் திருமதி ஆன் சென் மற்றும் Hutchison Telecommunications Lanka (HUTCH Sri Lanka) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ரா குப்தா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT