Saturday, May 11, 2024
Home » மருந்து மோசடி: கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் மார்ச் 14 வரை வி.மறியல் நீடிப்பு

மருந்து மோசடி: கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் மார்ச் 14 வரை வி.மறியல் நீடிப்பு

- மனித உரிமை மீறல் எனவும் நஷ்டஈடு வழங்குமாறும் மனு

by Rizwan Segu Mohideen
February 29, 2024 8:34 pm 0 comment

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து Immune Globulin தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேருக்கும் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் (29) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் குறித்த உத்தரவை வழங்கியுள்ளார்.

இதேவேளை, நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமக்கு ஏற்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரதிவாதிகளிடமிருந்து ரூ. 100 மில்லியன் நட்டஈட்டையும் பெற்றுத் தருமாறும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பெப்ரவரி 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டதோடு, நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுததப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டு மேலும் 6 பேருக்கும் இன்று (29) வரை விளக்கமறியல் நீடித்த உத்தரவிட்ட மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டார்.

மருந்து மோசடி: கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கும் பெப். 29 வரை விளக்கமறியல்

கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா!

அமைச்சர் கெஹெலியவுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT