Monday, April 29, 2024
Home » கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா!

கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா!

- கடிதத்தை ஏற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
February 6, 2024 1:56 pm 0 comment

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார்.

அதற்கமைய குறித்த சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து (Immune Globulin) தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நலனை கருதி அவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அமைச்சுப் பதவியை இறுதியாக ஹாபிஸ் நசீர் அஹமட் வகித்திருந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கெஹெலிய ரம்புக்வெல்ல அவர் கைது செய்யப்பட்டு மறுநாளான பெப்ரவரி 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2370-06_T

அமைச்சர் கெஹெலியவுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் கீழ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT