Sunday, April 28, 2024
Home » Huawei Cloud மற்றும் Orel IT இணைந்து Orel Cloud இல் Enadoc தீர்வு அறிமுகம்

Huawei Cloud மற்றும் Orel IT இணைந்து Orel Cloud இல் Enadoc தீர்வு அறிமுகம்

by Rizwan Segu Mohideen
February 27, 2024 3:40 pm 0 comment

Huawei Cloud மற்றும் Orel IT ஆகியன தமக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம், ஒரு அதிநவீன ஆவண முகாமைத்துவ தீர்வான Enadoc இனை Orel Cloud இல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளன. கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது, Orel Cloud வாடிக்கையாளர்களுக்கு மென்பொருளை சேவையாக (Software as a Service – SaaS) தங்கு தடையற்ற வகையில் பெறும் தளமாக வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்தது.

இந்த வெளியீட்டு விழாவில் தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள், தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் யுகத்தில் வணிக நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வலுவான SaaS தளத்தை வழங்குவதற்கான Enadoc மற்றும் Orel Cloud இன் உறுதிப்பாட்டை இந்த வெளியீட்டு நிகழ்வு கோடிட்டுக் காட்டுகிறது.

நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய, Enadoc இன் பிரதம நிறைவேற்று அதிகாரி வசந்த வீரகோன், Orel Cloud இல் Enadoc இன் திறன்கள் மற்றும் நன்மைகள் பற்றி குறிப்பிட்டார், “பயனர்களுக்கு தடையற்ற ஆவண முகாமைத்துவ செயன்முறையை Enadoc வழங்குகிறது. பாதுகாப்பு, இலகுவான அணுகல், செயற்றிறன் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம், நிறுவனங்கள் தமது தரவுகளை நிர்வகிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.” என்றார்.

திறனான டிஜிட்டல் மயமாக்கல், சேமிப்பகம், முகாமைத்துவம், மீளப்பெறல் ஆகிய விடயங்களை வழங்குவதன் மூலம், அனைத்து அளவிலான வணிகங்களுக்குமான ஆவண முகாமைத்துவத்தை Enadoc எளிதாக்குகிறது. இந்த விரிவான தீர்வானது, டிஜிட்டல் மயமாக்கல், ஒழுங்கமைத்தல், பாதுகாப்பு அம்சங்களை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், உற்பத்தித்திறனை அதிகரித்து, செலவுகளைக் குறைத்து, ஒன்றுடன் ஒன்றான இணக்கத்தை உறுதி செய்கிறது. நிறுவனங்கள் தமது செயற்பாடுகளில் உச்சத்தை அடையவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், பயனுள்ள வகையிலான ஆவண டிஜிட்டல்மயமாக்கல், ஒழுங்கமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் தமது வணிகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் Enadoc உதவுகிறது.

Orel Cloud வாடிக்கையாளர்கள் SaaS தளம் ஊடாக Enadoc ஐ அணுக முடியும். Huawei Cloud Stack Technology மூலம் செயற்படும் Orel Cloud ஆனது, உட்கட்டமைப்பை நிர்வகிக்க அவசியமான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு hybrid cloud ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT