Sunday, May 5, 2024
Home » தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் காதருக்கு கௌரவம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் காதருக்கு கௌரவம்

by Gayan Abeykoon
February 23, 2024 5:05 am 0 comment

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர், பேராசிரியர் எம்.எல்.ஏ.காதரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (21) அப்பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 27 வருடங்களில் மேற்படி பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளுக்காக அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் அதன் வரலாற்றில் கல்வி, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றில் வழிநடத்தும் புகழ்பெற்ற பல உபவேந்தர்களை பெற்றுள்ளமை அதிர்ஷ்டமாகும். அந்த வகையில் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் பல்கலைக்கழக பாரம்பரியத்தில் ஒரு தனித்துவமான இடம் பிடித்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான அவரது அர்ப்பணிப்பு இன்றும் மாறாமல் உள்ளது.

2021 இல் சமூகவியலில் இளங்கலை கலை திட்டத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் தொடங்க ஒப்புதல் அளிப்பதில் பேராசிரியர் காதர் முக்கிய பங்கு வகித்திருந்ததாக, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT