Monday, May 6, 2024
Home » JVP இந்தியா செல்லாதிருந்திருந்தால் UPI கட்டண முறைக்கு இன்று அதிக எதிர்ப்பு வந்திருக்கும்

JVP இந்தியா செல்லாதிருந்திருந்தால் UPI கட்டண முறைக்கு இன்று அதிக எதிர்ப்பு வந்திருக்கும்

- வெல்லவாயவில் அமைச்சர் மனுஷ தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
February 17, 2024 9:34 pm 0 comment

மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இந்தியாவிற்கு செல்லாமல் இருந்திருந்தால், UPI பணம் செலுத்தும் முறைக்கு எதிராக பல தவறான கருத்துக்களைப் பரப்பியிருப்பார்கள். இதுவரையில் அவர்களிடமிருந்த இந்திய விரோத கொள்கையை மாற்றியமைத்துள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இது அவர்களிடம் ஒரு நிரந்தரமன சிறந்த கொள்கை இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாகும் .

இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது சாதகமான விடயம். மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையினால் உயிரிழந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கிடைக்காமையானது மிகவும் சோகமான வரலாற்றை நினைவூட்டுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெல்லவாய பொது விளையாட்டு மைதானத்தில் மொனராகலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்றும் (17) நாளையும் (18) நடைபெறவுள்ள இலங்கையை வெற்றிகொள்வோம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. இலங்கைக்கு வழங்கும் ஆதரவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொள்கைகளுக்கு வாக்களித்தமையால் தான் நம் நாடு இந்நிலைக்கு வந்தது. ஆனால் நாட்டிற்கு வெற்றியைத் தரும் வாய்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே எனக்கு எப்போதும் இருந்த எண்ணம். மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கிறேன். கொள்கைகளை மாற்றுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டானது அண்மைக்காலமாக பஸ்வண்டிகளில் மக்களை ஏற்றி கூட்டத்தை நடாத்தும் மக்கள் முன்னணியின் சகோதரர்களின் செயற்பாடுகள்.

இந்தியா தொடர்பில் அவர்களின் கொள்கை என்ன ஆனது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களின் ஐந்து கொள்கைகளின் ஒன்று இந்திய எதிர்ப்புக்கு கொள்கையாகும்.

அக்கொள்கையினால் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துவிட்டு இப்போது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டதால் பறிபோன உயிர்கள் மீண்டும் பெற முடியாது.

இந்த நாட்டு மக்களுக்காக நான் இவ்வளவு செய்தாலும், மக்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி இருந்தால், நாடு எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும்?

இந்நேரத்தில் நாட்டைக் காப்பற்ற முடியாது , மக்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என்ற மனப்பான்மையில் ஜனாதிபதி இருந்திருந்தால் இன்று இந்த நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்?

நாட்டை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என அனைவரும் கடந்த காலத்தில் கூறினார்கள்.

தவறு செய்த மக்கள் விடுதலை முன்னணி சகோதரர்கள் இப்போது இந்தியாவிற்கு செல்லவில்லை என்றால் ஜனாதிபதியின் தலையீட்டில் இந்திய UPI பண பரிவர்த்தனை முறையை ஜனாதிபதி உருவாக்கிய போது ரணில் நாட்டை இந்தியாவிற்கு விற்கப் போகிறார் என்று சொல்லி இருப்பார்கள். அவர்கள் முன்பு சொன்ன கதைகள் நினைவிருக்கிறதா?

இப்போது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் வளங்களை இத்தியாவிற்கு டெண்டர் மூலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

இந்த நாட்டு மக்களுக்காக நான் இவ்வளவு செய்தாலும், மக்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை என்ற கொள்கையில் ஜனாதிபதி இருந்தால், நாடு எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும்?

பொருளாதர நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வெளிநாட்டு தொழிலார்களின் பணத்தை வங்கி ஊடக பணப் பரிமாற்றம் செய்ய சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தோம். அதனால் அவர்கள் பணத்தை வங்கி முலம் அனுப்பி நாட்டை மீட்க பங்களிப்பு செய்தார்கள்.

எனவே, அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் தான் நாம் நடமாடும் மக்கள் சேவைகளை நாடுப்பூரகவும் நடத்தி வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT