Monday, April 29, 2024
Home » சுயமாக இயங்குவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்யும் சன் மெட்ச் நிறுவனம்

சுயமாக இயங்குவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்யும் சன் மெட்ச் நிறுவனம்

by mahesh
February 14, 2024 10:32 am 0 comment

இலங்கையின் முதலாவது மெழுகினால் தயாரிக்கப்பட்ட “சூரியா” வர்த்தக நாம தீக்குச்சி உற்பத்தியாளரும், ஊதுபத்திகள், மெழுகுவர்த்திகள் மற்றும் தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தை முன்னோடியுமான சன் மெட்ச் கம்பனி, தனது ஸ்தாபகர் மறைந்த ரி.ஆர்.ஆர். ராஜனின் 21ஆம் நினைவு தினத்தை அண்மையில் அனுஷ்டித்திருந்தது. அதனை முன்னிட்டு, இரு தசாப்த காலமாக நிறுவனம் முன்னெடுத்து வரும் கூட்டாண்மை சமூக பொறுப்புச் செயற்பாடான “நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) எனும் திட்டத்தை இம்முறையும் தொடர்ந்திருந்தது.

சன் மெட்ச் நிறுவன பணிப்பாளரும் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியுமான கௌரி ராஜன் கருத்துத் தெரிவிக்கையில், “சகல சமூகத்துக்கும் சன் மெட்ச் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக “நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) திட்டம் அமைந்துள்ளது. எமது மறைந்த ஸ்தாபகர் ரி.ஆர்.ஆர்.ராஜனின் 21ஆவது வருட ஞாபகார்த்தமாக, அங்கவீனமுற்றவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கியிருந்தமை மட்டுமன்றி, எதிர்பார்ப்பு, மீண்டெழுந்திறன் மற்றும் முன்னேற்றத்துக்கான அடித்தளத்தையும் ஏற்படுத்தியிருந்தோம். “நெவத அவிதிமு” (மீண்டும் நடமாடுவோம்) ஊடாக, தமது வலிமையினால் எம்மை ஊக்குவிப்போருக்கு வலுவூட்டும் மற்றும் மாற்றியமைக்கும் வழிகளையும் தொடர்ந்தும் ஏற்படுத்துகின்றோம்.” என்றார்.

மறைந்த ரி.ஆர்.ஆர். ராஜன், குண்டசாலை, மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையத்தை மறுசீரமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். இலங்கை அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்ட நலன்புரி அமைப்பாக இந்த நிலையம் திகழ்வதுடன், நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு செயற்கை அவயவங்களை தயாரித்து வழங்கும் பணியை மேற்கொள்கின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT