Monday, April 29, 2024
Home » புனித பிரிஜட்
இவ்வார புனிதர்

புனித பிரிஜட்

by damith
January 30, 2024 11:05 am 0 comment

புனித பிரிஜட்அயர்லாந்தின் பாதுகாவலர்களுள் ஒருவர் ஆவார். பிரிஜட் நிஜமாகவே ஒரு மனிதர்தானா என்ற விவாதமும் உண்டு. பிரிஜட் எனும் “செல்டிக்” பெண் தெய்வத்துக்கும் இவருக்குமுள்ள பெயர் நினைவுத் திருநாள் தினம், இயற்கை நிகழ்வுகள், புனைவுகள் மற்றும் அவரது தொடர்புடைய நாட்டுப்புறப் பண்பாடுகள் ஆகியன இருவரும் ஒருவர்தானா என்ற விவாதத்தை எப்போதுமே முன்னிறுத்துகின்றன.அறிஞர்களோ, அவர் செல்டிக் பெண் தெய்வத்தின் பண்புகளைக் கொண்ட சாதாரண பெண்தான் என்று கூறுகின்றனர். அவரது வாழ்க்கையின் நம்பகத்தன்மையைப் பற்றிய ஏற்கனவே இருந்த பழம்பெரும் தரமான மாறுபட்ட மற்றும் முரண்பாடு கொண்ட வரலாறு காரணமாக மதச் சார்பற்ற மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களிடையே எப்போதுமே விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆரம்பத்திலிருந்தே பிரிஜட் பரிசுத்தமானவராக இருந்தார்.

அவரை வாங்கிய பாதிரியார் அவருக்கு உணவு கொடுக்க முயலும்போதெல்லாம் அவர் பாதிரியின் அசுத்தம் காரணமாக வாந்தி எடுத்தார் என்பர். ஆனால், அப்போதெல்லாம் செந்நிற காதுகளைக் கொண்ட ஒரு வெண்ணிற பசு வந்து அதிசயமாக அவரை இரட்சித்தது என்பர். அவர் வளர்கையிலேயே பல அதிசயங்களை நிகழ்த்தினார்.

நோயுற்றோரின் நோய் நீக்கினார். ஏழைகளுக்கு உணவிட்டார். ஒருமுறை தமது தாய் வைத்திருந்த வெண்ணெய் முழுதும் எடுத்து அவர் ஏழைகளுக்கு கொடுத்தார். ஆனால், அவரது செபத்தின் பயனாக, காலி செய்யப்பட்ட வெண்ணெய் மீண்டும் நிரப்பப்பட்டதாக கூறுகிறார்கள். பத்து வயதான பிரிஜிட்ஒரு வீட்டு வேலைக்கார பெண்ணாக தமது தந்தையின் வீட்டுக்கே சென்றார். அவரது தாராள தொண்டுள்ளமானது, இல்லையென்று கேட்பவர்களுக்கு தனது தந்தையின் பொருட்களை வழங்கினார். சுமார் 480ம் ஆண்டுபிரிஜட் தமது ஏழு உதவியாளர் பெண்களுடன் இணைந்து கில்டேர் நகரில் ஒரு துறவு மடத்தினை நிறுவினார். அது அங்கே அவர்களால் ஒரு நித்திய சுடர் எரிய காரணமானது. அவர் ஆண்களுக்கான ஒரு துறவு மடமும், பெண்களுக்கான ஒரு துறவு மடமும் நிறுவினார்.

பிரிஜட்டின் சிறு வாக்குவன்மைகில்டேர் நகரை ஒரு ஆன்மிகம் மற்றும் கற்பதற்கான ஒரு மையமாக மாற்றியது. அத்துடன் ஒரு ஆலயங்களின் நகராக உருவெடுத்தது. அவர் உலோக வேலைகள் மற்றும் ஒளியமைக்கும் பணிகள் உள்ளிட்ட கலைப் பள்ளியொன்றையும் நிறுவி நடத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT