Monday, May 20, 2024
Home » இயேசுவுக்கும்‌ இருளின்‌ சக்திக்கும்‌ இடையிலான கடுமையான போராட்டம்

இயேசுவுக்கும்‌ இருளின்‌ சக்திக்கும்‌ இடையிலான கடுமையான போராட்டம்

ஞாயிறு நற்செய்தி தரும் சிந்தனை ​

by damith
January 30, 2024 9:04 am 0 comment

இறைமகனாக உலகில்‌ வலம்‌ வந்த போதிலும்‌ அடிப்படையில்‌ இயேசு இறைவாக்கினராகவே செயல்பட்டார்‌. தூய ஆவியின்‌ வல்லமை நிறைந்தவராய்‌, ஆற்றல்மிக்க அதிகாரம்‌ உள்ளவராகப்‌ போதித்தார்‌. மனிதனின்‌ அதிகாரம்‌ குறுகியது. கடவுளின்‌ அதிகாரம்‌ பரந்தது.

நிலம்‌ அளக்கும்‌ அரசு ஊழியர்‌ ஒருவர்‌ ஒரு குடியானவரின்‌ நிலத்துக்கு உரிய ஆவணங்களுடன்‌ சென்றார்‌. உறுதியான வேலிகளால்‌ பாதுகாக்கப்பட்டிருந்த நிலத்துக்கு வெளியே நின்றுகொண்டு வழியைத்‌ திறக்கும்படி உரக்கக்‌ கத்தினார்‌. சில நிமிடங்களுக்குப்‌ பின்‌ ஒரு மனிதன்‌ வருவதைக்‌ கண்டு அவனிடம்‌ கடுமையாகப்‌ பேசினார்‌.

அந்த மனிதனோ சற்றும்‌ பதற்றமின்றி அமைதியாகக்‌ கதவைச்‌ சாத்திவிட்டுப்‌ போய்க்கொண்டே இருந்தார்‌. அதைக்‌ கண்ட அதிகாரி, “உனக்கு எவ்வளவு திமிர்‌? நான்‌ நினைத்தால் உன்‌ நிலத்தின்‌ அளவையே மாற்றி அமைத்து விடுவேன்‌” என்றார்‌ கோபமாக.

அதற்கு அந்த மனிதன்‌, “ஐயா, எனக்கு கன்னற்கையல்ல கூட நிலமில்லை. அப்படி இருக்க உம்மால்‌ என்ன செய்ய முடியும்‌?” என்று சொல்லிவிட்டுத்‌ தன்‌ வழியே போகலானான்‌.

ஆத்திரமடைந்த அரசு அலுவலர்‌ இன்னும்‌ அந்த இடத்திலேயே நின்று கொண்டு நிலத்தின்‌ உரிமையாளரை கூவி அழைத்தார்‌. அவர்‌ வந்ததும்‌ “உன்‌ நிலத்தை நான்‌ அளந்து பார்கக வேண்டும்‌. வாசலைத்‌ திறந்துவிடு” என்றான்‌. அவன்‌ உள்ளே விட மறுக்கவே தன்‌ அடையாள அட்டையைக்‌ காட்டி அந்தக்‌ குடியானவனை சிறையில்‌ தள்ளித்‌ தண்டிக்கக்கூடத்‌ தன்னால்‌ முடியும்‌ என்று கூறி மிரட்டினான்‌.

கொஞ்சம்‌ பயந்துவிட்ட குடியானவன்‌ கதவைத்‌ திறந்துவிடவே அந்த அதிகாரி பயிர்‌ நன்கு விளைந்த இடத்தில்‌ கட்டிலைப்‌ போடச்‌ சொல்லி அதில்‌ அமர்ந்து கொண்டான்‌. குடியானவனுக்குச்‌ சொல்ல முடியாத கோபம்‌. அதனால்‌ தன்‌ தொழுவத்திலிருந்த முரட்டுக்‌ காளையை அவிழ்த்து அதிகாரியின்‌ பக்கமாக ஒட்டிவிட்டான்‌. பயந்து போன அதிகாரி காளையைத்‌ தடுத்து நிறுத்துமாறு கெஞ்சினான்‌. அப்போது அந்த குடியானவன்‌, “உனது அடையாள அட்டையையும்‌ அரசு ஆணையையும்‌ அதிகாரத்தையும்‌ அந்தக்‌ காளையிடம்‌ காட்டு” என்றான்‌. அதிகாரம்‌, ஏற்றிருக்கும்‌ பதவியிலா? இல்லை.

கடந்த ஞாயிறு நற்செய்தி இயேசுவுக்கும்‌ சாத்தானுக்குமிடேயே ஏதோ மற்போரே நடப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. விவிலிய அறிஞர்களின்‌ கூற்றுப்படி, இயேசுவின்‌ வரலாற்றை நற்சய்தியாளர்‌ மாற்கு இயேசுவுக்கும்‌ சாத்தானுக்கும்‌ இடையே நடக்கும்‌ ஒரு பெரும்‌ பிரபஞ்ச யுத்தமாகவே சித்தரிக்கிறார்‌.

சில எடுத்துககாட்டுக்கள்‌ : மாற்கு‌ 1 : 12-13 பாலைவனச்‌ சோதனை, 1:32-34 பல பேய்கள்‌ விரட்டப்படுகின்றன, 3:30 பெயல்‌ சேபூல்‌ சர்ச்சை, 5:1-20 இலேகியோன்‌ என்ற பேய்ப்பட்டாளம்‌, 7:24-30 பேயின்‌ பிடியிலிருந்து சிறுமி விடுதலை, 6:7 சீடர்களுக்கு பேய்கள்‌ மீது அதிகாரம்‌, 16:17 தன்‌ மீது நம்பிக்கை கொள்வோர்‌ பேய்களை ஒட்ட முடியும்‌ என்ற உறுதிப்பாடு, …

இவ்வாறு இயேசுவுக்கும்‌ இருளின்‌ சக்திக்கும்‌ இடையே ஒரு கடுமையான போராட்டமே மாற்கு எழுதிய நற்செய்தியின்‌ மையச்‌ சரடாகும்‌.

அருட்திரு லூர்துராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT