Sunday, April 28, 2024
Home » 2023: அந்நியச் செலாவணி வருவாயாக 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்

2023: அந்நியச் செலாவணி வருவாயாக 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு

by damith
January 30, 2024 7:30 am 0 comment

நாட்டுக்குள் அந்நிய செலாவணியை கொண்டு வரும் அரசின் வேலைத்திட்டத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதன் மூலம் 2023 இல், 4,75,000 கோடி ரூபாவை (14.94 பில்லியன் அமெரிக்க டொலர்) ஏற்றுமதி வருவாயாக இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதி உட்பட இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் இதுவாகுமென்றும் அச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 3,76,830 கோடி ரூபாய் (11.85 பில்லியன் அமெரிக்க டொலர்) என்றும் மற்றும் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதி வருவாய் 97,944 கோடி ரூபாய் (3.08 பில்லியன் அமெரிக்க டொலர்) எனவும் இலங்கை அபிவிருத்தி ஏற்றுமதி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இது கடந்த ஆண்டு 2022 இல் பதிவான 14.99 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 0.39 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது, ஆனால், சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட வளர்ச்சி சுமார் 63 சதவீதமாக உள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2023 டிசம்பரில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 2022 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 11.25 சதவீதத்தால் 947.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது, இது, 2023 நவம்பரில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 5.16 சதவீதம் குறைவு. எவ்வாறாயினும், டிசம்பர் 2023 இல், ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதிகள் நேர்மறையான அறிகுறியைக் காட்டியுள்ளன, இது ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது. மேலும் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 3,080.9 மில்லியன் அமெரிக்க டொலராகும். ஒப்பிடும்போது இது, 63.1 சதவீதம் ஆகும். 2022 இன் தொடர்புடைய காலகட்டத்துக்கு அதிகரித்துள்ளது ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட சேவைகள் ஏற்றுமதி தகவல் தொழில்நுட்பம்/வணிக செயல்முறை முகாமைத்துவம் (ICT/BPM), கட்டுமானம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் தளபாடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதென, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT