Sunday, April 28, 2024
Home » அலனின் சாதனை ஓட்டத்தால் நியூசிலாந்து தொடர் வெற்றி

அலனின் சாதனை ஓட்டத்தால் நியூசிலாந்து தொடர் வெற்றி

by gayan
January 18, 2024 10:34 am 0 comment

பின் அலனின் அதிரடி சதத்தின் உதவியோடு பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் 45 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரை 3–0 என வென்றது.

டுனிடினில் நேற்று (17) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து சார்பில் அலன் 62 பந்துகளில் 137 ஓட்டங்களை பெற்று டி20 போட்டியில் நியூசிலாந்து சார்பில் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராக சாதனை படைத்தார்.

இதன்போது அவர் 16 சிக்ஸர்களை விளாசி டி20 சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய ஆப்கானின் ஹசரதுல்ல சசாயின் சாதனையை சமப்படுத்தினார்.

இதன்போது ஹரிஸ் ரவுப் வீசிய ஒரே ஓவரில் அலன் 27 ஓட்டங்களை விளாசினார். அப்போது அவர் பந்தை மைதானத்திற்கு வெளியில் மூன்று தடவைகள் அடித்ததால் நடுவர் மூன்று முறை பந்தை மாற்ற வேண்டி ஏற்பட்டது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களையே பெற்றது. பாபர் அஸாம் 37 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்றார்.

தொடரின் கடைசி இரு போட்டிகளும் நாளை மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்சேர்ச்சில் நடைபெறவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT