Sunday, April 28, 2024
Home » சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய “கொலொம்புர சாரிக்கா”

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய “கொலொம்புர சாரிக்கா”

66 வருட வரலாற்றில் இ.போ.ச புதிய சேவை

by gayan
January 18, 2024 7:00 am 0 comment

நாட்டின் சுற்றுலாப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் விசேட சொகுச பஸ் சேவையை நடத்த இ.போ.ச திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ள பல பஸ் வண்டிகள் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் அவதானிக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் 66 வருட வரலாற்றில் முதல் தடவையாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாவை விரும்பும் இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பஸ் சேவையை நடத்துகிறது.

ஆரம்ப கட்டத்தில், கொழும்பை மையமாக கொண்டு நான்கு சுற்றுலா வலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இது ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த பஸ் வண்டிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் நிர்வாக அதிகாரசபை, நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலா வலயங்களை அடிப்படையாகக் கொண்டு பேருந்து சேவையை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT