– பலம் வாய்ந்த நாடுகளிடம் ஜனாதிபதி கோரிக்கை
காலநிலை செழுமைத் திட்டங்கள் என்பது காலநிலைப் பாதுகாப்பற்ற உலகில் செழிப்பிற்கான ஒரு மூலோபாயம் மாத்திரமல்ல, பூச்சிய காபன் உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதிப்புக்குள்ளாக்கக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நேற்று (16) உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அண்மையில் டுபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில், காலநிலை பாதிப்புக்குள்ளாகும் வளர்ந்து வரும் 20 நாடுகள் தங்களின் காலநிலை மீள்திறன் திட்டங்களை வெளியிட்டன.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி நிலை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகப் பொருளாதார நிலை மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக நிதி வசதிகள் அதிகம் தேவைப்படும் நாடுகளுக்கு அதனை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, காலநிலை செழுமைத் திட்டத்தில் பங்குதாரர்களாகி, நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு முன்னேற்றகரமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளிடமும், தனியார் துறையினர், சர்வதேச நிதிச் சமூகம் ஆகியவற்றிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு:
காலநிலை பாதிப்புக்குள்ளாகக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தற்போதைய பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் எனக்கு அழைப்பு விடுத்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
காலநிலை செயற்பாடுகள் மூலம் வளமான முன்னேற்றத்தை அடைவதற்கான எங்கள் கூட்டு வேண்டுகோள், புத்தாக்க தீர்வுகள், நிலையான உலகத்திற்கான நோக்காக உள்ளது.
காலநிலை மாற்றங்களில் ஏற்படும் சிக்கலான ஏற்றத்தாழ்வுகளை நாம் அனைவரும் அறிவோம். உலகளாவிய காபன் வெளியேற்றத்திற்கு சிறிதளவு கூட பங்களிக்காத உலகளாவிய தெற்கில் பாதிக்கப்படக்கூடிய வளர்ந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்கொள்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, சமநிலையை மீட்டெடுப்பதற்கான பலதரப்பு முயற்சிகளின் அர்ப்பணிப்பு அதிகமாக உள்ள போதும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளன.
டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில், காலநிலை நீதி தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் தான் இலங்கையினால் வறண்ட வலய முன்முயற்சி முன்வைக்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது வறண்ட வலயத்தில் முக்கியமான காலநிலை வளங்களை நிலைநிறுத்துவதில் தனியார் முதலீட்டிற்கு ஒரு உத்வேகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் நமது காடுகள், சதுப்புநிலங்கள், சமுத்திரங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் என்பன உள்ளடங்குகின்றன. அத்தகைய முதலீட்டுக்கான வழிகளை அடையாளம் காண, வளர்ந்து வரும் நாடுகள் வலுவான திட்டங்களையும் மூலதனத்தையும் வழங்குவதற்காக முதலீட்டாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும்.
காலநிலை செழுமைத் திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை சவாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஊடாக நமது காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை அடைய முடிவதோடு இலங்கையர்களுக்கு நிலையான செழிப்பை அடைய முடியும்.
இலங்கை காலநிலை திட்டத்தின் ஊடாக தொழில்துறை மற்றும் விநியோக வலயமைப்பை பாதுகாப்பதற்கான வளங்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகள் உள்ளிட்ட தீர்மானமிக்க துறைகளின் முதலீடுகளுக்கு அவசியமான திட்டங்களை உருவாக்கி வருகின்றது.
காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இலக்குகளை நோக்கிய தலையீடுகள், தேசிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்குள் வலுசக்தி ஏற்றுமதியாளராக மாறுவதோடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் உள்நாட்டு வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும், காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர், இலங்கையின் வலுசக்தி உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, 2040 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு தேவை 100% ஐ விடவும் அதிகரிக்க கூடுமென கருதப்படுகிறது. அத்தோடு, திட்டங்களில் குறைந்த காபன்-செறிவும் அதிக உற்பத்தியும் எதிர்பார்க்கப்படுவதோடு விவசாய திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின் திட்டங்கள் ஆகியவை அடங்கும். இதனூடாக கிராமிய பொருளாதாரம் மற்றும் பெறுமதியான உள்நாட்டு உற்பத்தி வலையமைப்பொன்றை இணைக்கும் முதலீடுகள் உறுதி செய்யப்படும்.
மேற்படி காலநிலை செழுமைத் திட்டத்தின் முதலீட்டு வாய்ப்புக்களை அடைந்துகொள்ள நாம் அர்பணிப்புடன் செயற்படுவதோடு, நிதி வசதிகளை ஏற்படுத்தி முதலீடு செய்யக்கூடிய திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தல் உள்ளிட்ட தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எவ்வாறாயினும், எதிர்பார்ப்புடன் கூடிய இந்த திட்டத்தின் வாயிலாக தொழில் உருவாக்கத்திற்கான பயிற்சிகள், திறன், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான முதலீடுகளை கோருகிறோம். நிலையானதும் காலநிலை பாதுகாப்புக்கான மாற்றத்திற்குள் அதிகளவான பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு இதனூடாக கிடைக்கும்.
பாதிக்கப்படக்கூடிய 20 தரப்புக்களின் குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் (V20) காலநிலை செழுமைத் திட்டம், பாதுகாப்பற்ற உலகில் செழிப்புடன் வாழ்வதற்கான மூலோபாய வழிமுறையாக மாத்திரமின்றி, பூச்சிய காபன் உலகின் வெற்றியாளர்களாக எம்மை அடையாளப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலாகும்.
எமது செல்வந்த மற்றும் பிரதான பொருளாதார உரிமையாளர்கள் வசமாக காணப்படும் வளங்கள் எம்மிடத்தில் இல்லை. காலநிலை அனர்த்தங்களின் தாக்கம் காரணமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிதி வாய்ப்புக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. அதனால் உலக பொருளாதார பின்னணியில் உயர்வடைந்து செல்லும் கடன் சுமைக்கு மத்தியில் அதிகமான நிதி தேவை உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அதன்படி காலநிலை செழுமைத் திட்டங்களின் பங்குதாரர்களாக முன்வந்து, நிலையானதும், செழிப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்கிகொள்ள எமக்கு உதவுமாறு அபிவிருத்தி பங்குதாரர்கள், தனியார் துறையினர் மற்றும் சர்வதேச நிதிச் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகளாவிய தலைமைத்துவ தோல்வியின் விளைவுகளை வளர்ந்து வரும் நாடுகள் சுமக்க வேண்டிய நிலை