Monday, April 29, 2024
Home » பிஜி போர்ட்ஸ் நிறுவனத்துடன் பொது தனியார் பங்காண்மையை ஏற்படுத்திய எய்ட்கன் ஸ்பென்ஸ்

பிஜி போர்ட்ஸ் நிறுவனத்துடன் பொது தனியார் பங்காண்மையை ஏற்படுத்திய எய்ட்கன் ஸ்பென்ஸ்

by sachintha
January 12, 2024 6:42 am 0 comment

எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது பிஜி போர்ட்ஸ் கோர்ப்பரேஷன் (FPCL) மற்றும் பிஜி போர்ட்ஸ் டேர்மினல்ஸ் லிமிட்டட் (FPTL) ஆகியவற்றுடன் பொதுத் தனியார் பங்காண்மையைக் கொண்டுள்ளது.

பிஜி போர்ட்ஸ் கோர்ப்பரேஷனின் பங்குதாரர்களாக பிஜியில் உள்ள பொதுத் தொழில் முயற்சிகள் அமைச்சு, எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி. நிறுவனம் (ASPLC) மற்றும் பிஜி தேசிய சேமலாப நிதியம்(FNPF) என்பன உள்ளன.

(வலமிருந்து இடமாக) பிஜி நாட்டின் பிரதமர் சிடிவெனி ரபுகா பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பணிப்பாளர்களான கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, பிரதித் தலைவர்/ முகாமைத்துவப் பணிப்பாளர் (ASPLC), பிடா வைஸ், தலைவர் (FPCL)/ பிரதமரின் நிரந்தர செயலாளர் மற்றும் அஷ்வின் பால் பணிப்பாளர் (FNPF) ஆகியோரிடமிருந்து பங்கு இலாப காசோலையைப் பெற்றுக் கொண்டதைப் படத்தில் காணலாம்.

மற்றைய படத்தில் பிஜி நாட்டின் பிரதமர் சிடிவெனி ரபுகாவிடமிருந்தான பங்கு இலாப காசோலை பிரதித் தலைவர்/ முகாமைத்துவப் பணிப்பாளர் (எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி.) கலாநிதி பராக்கிரம திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டதைக் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT