214
வெலிகமையைச் சேர்ந்த அத்தரீக்கதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆன்மீக தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷேக் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்கள் நேற்று (3/1) தனது 86ம் வயதில் காலமானார். பிரபலமார்க்க அறிஞர் மர்ஹூம் அஷ்ஷேக் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மெளலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமி (ரஹ்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும் இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியான வெலிகம கல் பொக்கையில் அமைந்துள்ள பாரி அறபுக் கல்லூரியில் நீண்ட காலம் அதிபராக கடமையாற்றிய மர்ஹூம் அல் ஹாபிழ் அஷ்ஷேக் ஏ.ஆர் ஸகரிய்யா ஆலிம் அவர்களின் மருமகனான இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (4/1) இந்தியாவில் இடம் பெறவுள்ளது.