Tuesday, April 30, 2024
Home » பிரபல கேலிச்சித்திர கலைஞர் கெமிலஸ் பெரேரா காலமானார்

பிரபல கேலிச்சித்திர கலைஞர் கெமிலஸ் பெரேரா காலமானார்

- புகழ் பெற்ற கஜமேன், சிரிபிரிஸ் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்

by Rizwan Segu Mohideen
December 17, 2023 4:12 pm 0 comment

இலங்கையைச் சேர்ந்த பிரபல கேலிச்சித்திர கலைஞரான (Cartoonist) கெமிலஸ் பெரேரா காலமானார்.

அவர் இறக்கும் போது 84 வயதாகும்.

இலங்கையின் மிகவும் பிரபலமான ‘கஜமேன்’ மற்றும் ‘சிரிபிரிஸ்’ போன்ற சிங்கள கேலிச்சித்திர கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

அவரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெமிலஸ் பெரேரா 1966 ஆம் ஆண்டு ஒப்சேர்வர் இதழுக்காக கேலிச்சித்திரம் வரைய ஆரம்பித்ததோடு, “தெக்கோத் பத்மாவதி” எனும் கதாபாத்திரம் தொடர்பான கதையை அவர் வரைந்தார்.

குறிப்பாக அவரது மிகவும் பிரபலமான பாத்திரமான கஜமேன் கதாபாத்திரத்தை அவர் 1972 இல் உருவாக்கினார்.

கஜமேன் முதன்முதலில் லேக் ஹவுஸ் கேலிச்சித்திர கலை வெளியீடான சந்துதாவில் வெளிவந்ததோடு, 1975 முதல் 1984 வரை சித்தாரா கொமிக் வெளியீட்டில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தது.

லேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் Sunday Observer உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கு கேலிச்சித்திரங்களை கெமிலஸ் பெரேரா வரைந்துள்ளார்.

ஏப்ரல் 1984 இல் பெரேரா ‘கமில்லஸ்கே கஜமேன்’ எனும் தலைப்பில் ஒரு பத்திரிகையை தனது படைப்புக்காக ஆரம்பித்தார். அதன் பிரதிகள் 200,000 வரை விற்றது. அதனைத் தொடர்ந்து ‘கெமிலஸ்கே சமயன்’ மற்றும் ‘கெமிலஸ்கே கஜமேன் 2’ ஆகியவற்றை அவர் வெளியிட்டார். அவையும் 200,000-300,000 பிரதிகள் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து, அது ‘கெமிலஸ் பப்ளிகேஷன்ஸ்’ உருவாவதற்கு வழிவகுத்தது. கெமிலஸ் பெரேரா இப்புதிய வெளியீட்டு நிறுவனத்தை நிறுவ காரணம், அப்போது ஏற்பட்ட பதிப்புரிமைச் சிக்கல்களேயாகும். பின்னர் அவர் தான் வரைந்த 15 பாத்திரங்களை பதிவு செய்ததோடு, அதற்கான காப்புரிமையையும் பெற்றிருந்தார்.

அத்துடன், 2002 இல் ஜோன் லென்ட் (John Lent) இன் கார்ட்டூன் பிரிவின் ஆலோசக குழுவில் இணையுமான கெமிலஸ் பெரேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT