Monday, April 29, 2024
Home » திறப்பனை பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சோளச்செய்கை

திறப்பனை பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சோளச்செய்கை

by gayan
December 16, 2023 7:10 am 0 comment

விவசாய அமைச்சின் மூலம் சிறிய விவசாயிகளுக்கு (SAPP) செயற்திட்டத்தின் கீழ் 05 மாவட்டங்களில் 40. 000 ஏக்கரில் இம்முறை பெரும்போக சோளச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அனுராதபுரம், பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனூடாக ஒரு ஏக்கர் சோளச் செய்கைக்கு விவசாயி ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா பெறுமதியில் நிலம் தயாரித்தல் மற்றும் சாகுபடிக்கு நிதி உதவி பசளை என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக 40.000 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த செயற்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளின் பேரில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சோளச்செய்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட 20,000 விவசாயிகளை கொண்டு 20,000 ஏக்கரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளது.

இவ்வருடத்தினுள் கடந்த காலத்தில் இந்நாட்டில் மிருக விலங்கு உணவுகளை தயாரிப்பதற்கு தேவையான சோளம் இல்லாமையினால் பால் , முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி என்பன வீழ்ச்சியடைந்துள்ளது.விலங்கு உணவுக்கு தேவையான சோளம் உள்நாட்டு உணவுக்கு தேவையான சோள உற்பத்தியை அதிகரிக்கும் இலக்கை கொண்டு இந்த சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

40,000 ஏக்கர் சோளச் செய்கைக்கு ஒரு ஏக்கர் நிலம் தயார்படுத்தப்படுவது தொடக்கம் முதற்கட்ட செலவாக விதை, யூரியா உரம் என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக தேவையான TSP ( மண் உரம்) மற்றும் MOP ( பூந்தி உரம்) என்பன இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இச்செயற்திட்டத்திற்கு உலக வங்கி, விவசாய அபிவிருத்தி தொடர்பிலான சர்வதேச நிதியம் உதவி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் திறப்பனை கனுமுள்ள பகுதியில் உள்ள சில சோள வயல்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி திஸாநாயக்க அனுராதபுரம் மாவட்டத்தில் சோளச் செய்கையினை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பில் விவசாயிகள் ஞாபகமூட்டியதுடன் அந்த திட்டத்தை ஊக்குவிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மதார் தம்பி ஆரிப்…?

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT