Sunday, April 28, 2024
Home » பாவேந்தல் பாலமுனை பாறூக் எழுதிய 50 எழுத்து ஆளுமைகள் நூல் அறிமுக விழா

பாவேந்தல் பாலமுனை பாறூக் எழுதிய 50 எழுத்து ஆளுமைகள் நூல் அறிமுக விழா

by gayan
December 14, 2023 8:10 am 0 comment

பாவேந்தல் பாலமுனை பாறூக் எழுதிய 50 எழுத்து ஆளுமைகள் நூல் அறிமுக விழா கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் பேராசிரியர் செ. யோகராசா அரங்கில் நாளை மறுதினம் 16 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடை பெறும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலை வகித்து முதல் பிரதியை பெறவுள்ள இந்நிகழ்வில் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் நூல் நயவுரையை பேராசிரியர் எம்.எஸ். எம். அனஸ் நிகழ்த்த கருத்துரைகளை ஞானம் ஆசிரியர் எழுத்தாளர் டாக்டர் தி.ஞானசேகரன், எழுத்தாளர் உடுவை எஸ் தில்லை நடராஜா, கவிஞர் வாசுகி.பி.வாசு ஆகியோர் வழங்குவர்.

சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி, கவிமணி நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கவி வாழ்த்துரைப்பர். தமிழன் பிரதம ஆசிரியர் சிவா ராமசாமி, தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன், தினக்குரல் பிரதம ஆசிரியர் கே.பி. ஹரன், உதயம் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், தமிழ்மணி மானா மக்கீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வர்.

இவ்வரங்கில் இதன்போது வரவேற்புரையை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் தமிழ்முரசு ஆசிரியருமான ஜீவா சதாசிவம் நிகழ்த்துவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT