Thursday, May 9, 2024
Home » ரொஷான் ரணசிங்க நியமித்த கிரிக்கெட் இடைக்கால குழு வர்த்தமானி இரத்து

ரொஷான் ரணசிங்க நியமித்த கிரிக்கெட் இடைக்கால குழு வர்த்தமானி இரத்து

- புதிய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோ நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
December 12, 2023 5:38 pm 0 comment

– கிரிக்கெட் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ICC யிடம் கருத்து கோரல்

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்ய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தீர்மானித்துள்ளார்.

குறித்த இடைக்கால குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலைல இரத்து செய்யும் வர்த்தமானியில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக அவர் தனது X சமூக வலைத் தள கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் (SLC) பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பான அவதானிப்புகளை வழங்குமாறு தாம் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு (ICC) கடிதம் மூலம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் அவவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த நவம்பர் 06 ஆம் திகதி, முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபை ஒன்றை நியமித்ததோடு,  அதற்கு சில நாட்களின் பின் ICC இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

ரொஷான் ரணசிங்கவின் அமைச்சுகள் பவித்ரா, ஹரீன் பெனாண்டோவுக்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவன வழக்கு; மனு பரிசீலனை ஒத்திவைப்பு

இடைக்கால குழு நியமனம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது; ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன ரணதுங்க தலைமையில் ‘இடைக்கால சபை’ நியமனம்

இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன தலைமையில் இடைக்கால குழு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT