Home » நாட்டில் டெங்குநோய் வேகமாக பரவும் நிலை
இருமல், சளி, மூட்டுவலி அறிகுறிகளுடன்

நாட்டில் டெங்குநோய் வேகமாக பரவும் நிலை

மக்களுக்கு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

by gayan
December 9, 2023 10:42 am 0 comment

இலங்கையில் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகத் தெரிவித்த சுவாசநோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க, இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் காணப்படுமாயின் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறிகளாக இருக்கலாமெனவும், அவர் தெரிவித்தார்.

இருமல் மற்றும் சளியுடன் காய்ச்சல் இருந்தால், இது பொதுவான வைரஸ் காய்ச்சலென்று பலர் கருதுவதாகவும் ஆயினும், டெங்கு வைரஸ் தொற்றிய பின்னர் இந்த அறிகுறிகள் தோன்றக்கூடுமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டுவலி டெங்குவின் பொதுவான அறிகுறிகளாயினும், இருமல் மற்றும் சளி புதிய அறிகுறிகளல்லவெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

டெங்கு தவிர்ந்த ஏனைய வைரஸ் நோய்களும் இந்நாட்களில் பரவலாக உள்ளது. ஆகையால், பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT