விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொசான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவ்வமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 47(3)(அ) பிரிவிற்கமைய, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு உடன் அமுலாகும் வகையில் அவர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, ரொஷான் ரணசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதவி நீக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.
ரொஷான் ரணசிங்க இன்று (27) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார். அதில் தான் கொலை செய்யப்படலாம் என குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்தால் அதற்கு ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்கவுமே காரணம் எனவும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரச்சினைக்கு இம்முறை முடியாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தீர்வு காணப்படும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டுள்ளார்.