Monday, April 29, 2024
Home » National Industry Excellence Awards 2023 இல் தங்க விருதைப் பெற்று பிரகாசித்த சந்தனாலேப

National Industry Excellence Awards 2023 இல் தங்க விருதைப் பெற்று பிரகாசித்த சந்தனாலேப

by Rizwan Segu Mohideen
November 17, 2023 3:41 pm 0 comment

இலங்கையின் முன்னணி ஆயுர்வேத அழகுசாதன வர்த்தகநாமமான சந்தனாலேப, பெருமைக்குரிய 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்துறை விசேடத்துவ விருது வழங்கல் (National Industry Excellence Awards 2023) விழாவில் மீண்டுமொருமுறை கௌரவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையில் சிறந்து விளங்கும் இவ்வர்த்தகநாமம், அழகுப் பராமரிப்பு தொடர்பான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைப் பிரிவில், மதிப்பிற்குரிய தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய கைத்தொழில் விசேடத்துவ விருது வழங்கும் விழாவானது, பல்வேறு துறைகளில் உள்ள உள்ளூர் தொழில்முனைவோருக்கு அங்கீகாரம் வழங்கும் பெருமைக்குரிய நிகழ்வாகும். தேசிய கைத்தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் கடந்த காலங்களில் பல முறை விருது பெற்றதன் மூலம் சந்தனாலேபவின் தொடர்ச்சியான வெற்றியானது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, தற்போது வழங்கப்பட்டுள்ள தங்க விருதானது, இவ்வணிகத்தில் சிறந்து விளங்குதல் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் இவ்வர்த்தகநாமம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இது தொடர்பில், Sanjeewaka Ayurvedic Products Pvt Ltd தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமதிலக தெரிவிக்கையில், “மிகவும் மதிப்புமிக்க இந்த மேடையில் மீண்டும் எமக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளமையானது, உண்மையில் ஒரு பெரும் மரியாதையாகும். இந்தச் சாதனையானது எமக்கு சிறப்புக்கு உரியது எனக் குறிப்பிடுவதற்கு காரணம், சிறந்து விளங்குவதற்கு நாம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகும். இலங்கையின் ஆயுர்வேத அழகுசாதனத் துறையில் சந்தனாலேப முன்னோடியாக விளங்குகின்றது. அத்துடன் கடந்த 30 வருடங்களாக, அதே உயர் தரத்தை கடைப்பிடித்து இன்றுவரை சந்தையில் முன்னணியில் இருந்து வருகிறோம். நாம் பெற்ற இந்த விருதானது எமக்கு ஊக்கமளிப்பதோடு, இதற்காக எமது வாடிக்கையாளர்களுக்கும் எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறோம்.” என்றார்.

1948 ஆம் ஆண்டு, வியாங்கொடையில் உள்ள பிரபல ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் ஆர்.டி.பி. ஜயரத்ன இந்த வர்த்தக நாமத்திற்கு அடித்தளமிட்டதைத் தொடர்ந்து சந்தனாலேபவின் பாரம்பரியம் ஆரம்பமானது. ஆழமாக வேரூன்றப்பட்ட ஆயுர்வேத அறிவுடன், தலைமுறை தலைமுறையாக பேணப்படும் இரகசிய தயாரிப்புக் குறிப்புகள் மூலம், தனது ஆரம்பம் முதல் சந்தனாலேப தொடர்ச்சியாக உயர் தரங்களை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் இன்று, இந்த வர்த்தகநாமம் நாட்டின் மிகப்பெரிய ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியாளராகவும், அதிக போட்டி நிறைந்த சந்தையில் ஒப்பிட முடியாத தலைவராகவும் உள்ளது.

Cream & Scrub, Face Wash, Face Wash Powder, Shampoo, Body Lotion, Soaps போன்ற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆயுர்வேத தயாரிப்புகளை வழங்கும் சந்தனாலேப, புத்தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதி கொண்டுள்ளது. இந்நிறுவனம் ISO 9001:2015, ISO 14001:2015, ISO 22716 Cosmetic GMP அழகுசாதன சான்றிதழ்கள் மூலம் தரச் சான்றளிக்கப்பட்டுள்ளது என்பதோடு, நிறுவனம் கொண்டுள்ள மதிப்புமிக்க சான்றிதழ்கள் மூலம் அது மிக உயர்ந்த தரத்தை பேணுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தெளிவாகிறது.

இந்த மதிப்பிற்குரிய விருது மூலமான அங்கீகாரத்தினால் ஊக்கமளிக்கப்பட்டு, தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்க, சந்தனாலேப உறுதியுடன் உள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல புரட்சிகரமான தயாரிப்புகளை வெளியிடுவதற்கான சிறந்த திட்டங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. இதன் மூலம், சந்தையில் தனது முன்னணித்துவ நிலையை அது மேலும் உறுதிப்படுத்துகிறது.

Image:

Sanjeewaka Ayurvedic Products Pvt Ltd தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பிரேமதிலக மற்றும் திருமதி அனோமா முத்துநாயக்க, உப தலைவர் சுபுன் ராஜசூரிய ஆகியோர், கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும ஆகியோரிடமிருந்து விருதைப் பெற்ற போது…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT