Saturday, May 4, 2024
Home » பங்களாதேஷ் வழங்கிய மருந்துகள் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தன

பங்களாதேஷ் வழங்கிய மருந்துகள் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தன

by gayan
November 11, 2023 7:28 am 0 comment

பங்களாதேஷ் மருந்துக் கைத்தொழில் சங்கத்தால், இலங்கை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 கிலோகிராம் நிறை கொண்ட மருந்துகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. “பல ஆண்டுகளாக நாம் உலகம் முழுவதிலுமிருந்து மருந்துகளை அனுப்பியுள்ளோம். விமானத்தில் சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம்

செய்வதன் மூலம் மருந்துகள் இலங்கையில் கிடைப்பதற்கு நாம் தொடர்ந்து எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்” என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் சமிந்த பெரேரா தெரிவித்தார். இந்த மருந்துகள் பங்களாதேஷின் டாக்காவிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 190 விமானத்தில் கடந்த நவம்பர் 4ஆம் திகதி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. பங்களாதேஷால் வழங்கப்பட்ட மருந்துகள் பெக்சிம்கோ பார்மா, ஸ்கொயர், இன்செப்டா, ரெனாட்டா, யூனிமெட் யுனிஹெல்த், ஹெல்த்கேர், பீக்கான், ஆக்மி, சினோவியா பார்மா மற்றும் நுவிஸ்டா பார்மா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ உதவி தொடர்பாக பங்களாதேஷ் மருந்துத் தொழில்துறை சங்கத்தின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்த போது,“ பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை நாம் மதிக்கின்றோம்.

இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த எமது உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT